கோதுமை புல் சூப்பர் உணவு என்று அறியப்படுகிறது. இது ஒரு முளைத்த கோதுமை செடியின் இலைகள், இது கோதுமை தளிர் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் அனைத்து கூறுகளும் காணப்படுகின்றன. ஒரு ஆய்வின்படி, உணவில் கோதுமைப் புல் சேர்த்துக் கொள்வது ரத்த அழுத்தத்தை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது என கூறப்படுகிறது. மேலும், கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது என கூறப்படுகிறது. இதில் வைட்டமின் பி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், பாக்டீரியா எதிர்ப்பு அயோடின், செலினியம், இரும்புச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-கார்சினோஜெனிக் பண்புகள் உள்ளன. அதன் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
கோதுமை புல்லின் நன்மைகள்
இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு கோதுமை புல் சாப்பிடுவது நிவாரணம் அளிக்கும். இதனை உட்கொள்வதால் இரத்த அழுத்தம் குறையும். கோதுமைப் புல்லில் உள்ள குளோரோபில் என்ற மூலக்கூறு ஹீமோகுளோபினைப் போன்றது . இது இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. எனவே கோதுமை புல்லை உணவில் சேர்த்தால் ரத்த அழுத்த பிரச்சனை குறையும். கோதுமை புல்லை ஜூஸாக செய்து குடிப்பது சிறந்தது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! மன ஆரோக்கியத்தை பாதிக்கும் ‘துத்தநாக’ குறைப்பாடு!
கோதுமை புல் உடல் எடையை குறைக்க உதவுகிறது
கோதுமை புல் ஜூஸ் குடிப்பதால் உடல் எடையை குறைக்கலாம். இதில் கலோரிகள் மிக குறைவு மற்றும் கொழுப்பு இல்லை. கோதுமைப் புல் சாப்பிட்டு வந்தால் வயிறு நிறைவாக இருக்கும் என்பதால் பசி எடுக்காது. எனவே, அதிகரிக்கும் எடையைக் குறைக்க கோதுமைப் புல் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது
கோதுமைப் புல்லை உணவில் சேர்த்துக் கொண்டால் தொற்று நோய் குணமாகும். இதனை உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம்.
செரிமானத்திற்கு உதவும்
வைட்டமின்-பி, அமினோ அமிலங்கள் மற்றும் என்சைம்கள் கோதுமைப் புல்லில் உள்ளதால், இவை சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது.
கொலஸ்ட்ராலை குறைக்கும்
கோதுமை புல் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. கோதுமை புல் தூளை 10 வாரங்களுக்கு உட்கொள்வதன் விளைவாக ட்ரைகிளிசரைடு கொழுப்பு மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.
கோதுமை புல் பக்க விளைவுகள்
எனினும் கோதுமை புல் சாற்றை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தும், அவை பின்வருமாறு.
- பதட்டம்
- தலைவலி
- மலச்சிக்கல்
- வயிற்றுக்கோளாறு
- வாந்தி
- காய்ச்சல்
(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | முக அழகை கெடுக்கும் இரட்டை கன்னம்... சில ‘எளிய’ தீர்வுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ