தினம் ஒரு குவளை தக்காளி சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

நாம் அனைவரும் பெரும்பாலும் வீட்டு வைத்தியத்தை பின்பற்றுகிறோம், ஏனென்றால் வீட்டு வைத்திய முறையில் பக்க விளைவுகள் அதிகம் ஏற்படாது என்ற நம்பிக்கை இன்று நம் மனதில் இருப்பதால் தான்.

Last Updated : May 11, 2020, 11:15 PM IST
தினம் ஒரு குவளை தக்காளி சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? title=

நாம் அனைவரும் பெரும்பாலும் வீட்டு வைத்தியத்தை பின்பற்றுகிறோம், ஏனென்றால் வீட்டு வைத்திய முறையில் பக்க விளைவுகள் அதிகம் ஏற்படாது என்ற நம்பிக்கை இன்று நம் மனதில் இருப்பதால் தான்.

இந்நிலையில் இன்று நாம் நம் வீட்டின் சமையலறையில் உள்ள தக்காளியினை வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது பற்றி பார்க்க இருக்கிறோம்.

தக்காளி சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. நீங்கள் அதை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், நீங்கள் பெரும் நன்மைகளைப் பெறலாம். தக்காளி கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் அதன் சாறு அமிலத்தன்மை, உடல் பருமன் மற்றும் கண்களின் கடுமையான பிரச்சினையை நீக்குகிறது. இதனை விடவும் அதிக அளவு நற்பன்புகளை கொண்டுள்ளது தக்காளி பழங்கள்...

  • புற்றுநோய் தடுப்பு - தக்காளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபோலிக் அமிலம், பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, மேலும் தக்காளி சாறு உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை நிறுத்துகிறது. எனவே தினமும் தக்காளி சாறு குடிப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 18% குறையும் என கூறப்படுகிறது.
  • கண்களுக்கு நன்மை பயக்கும் - ஒவ்வொரு நாளும் 1 கிளாஸ் தக்காளி சாறு குடிப்பதால் கண்கள் பிரகாசமாகின்றன. நீங்கள் கண் கண்ணாடி பயன்படுத்துவோராக இருந்தால், இந்த சாற்றை ஒரு நாளைக்கு 2 முறை எடுத்துக் கொள்ளுங்கள். கூடிய விரைவில் நன்மை கிடைப்பதை நீங்கள் உணரலாம்.
  • எடை இழப்புக்கு உதவியாக இருக்கும் - உடல் எடையை குறைக்க, தினமும் காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாறு குடிக்கவும். சிறிது நேரத்தில் நீங்கள் ஒரு வித்தியாசத்தைக் காண்பீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
  • கல்லீரல் நச்சுதன்மையை நீக்க - கல்லீரல் நச்சுத்தன்மையை நீக்க தக்காளி சாறு உட்கொள்ள வேண்டும். இது உடல் மற்றும் கல்லீரலில் இருந்து அனைத்து நச்சுப் பொருட்களையும் அகற்ற உதவுகிறது. மற்றும் கல்லீரல், பித்தப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
  • இதய நோய்கள் - தக்காளி சாற்றில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் C மற்றும் கோலின் ஆகியவை உள்ளன, அவை இதயத்திற்கு சிறப்பு கவனம் செலுத்துகின்றன. இந்த காரணத்திற்காக, ஒவ்வொரு நாளும் ஒரு கிளாஸ் தக்காளி சாறு குடிக்க வேண்டும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Trending News