எந்த வயதாக இருந்தாலும் எளிதாக எடையை குறைக்கலாம்: இந்த டிப்ஸ் உதவும்

Weight Loss Above 40: நீங்கள் விரும்பினால் இந்த வயதிலும் எடையை எளிதில் குறைக்கலாம். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 10, 2023, 06:21 AM IST
  • கார்போஹைட்ரேட்டை குறைக்க வேண்டாம்.
  • உடலை இறுக்கம் இல்லாமல் தளர்த்திக்கொள்ளவும்.
  • நல்ல தூக்கம் அவசியம்.
எந்த வயதாக இருந்தாலும் எளிதாக எடையை குறைக்கலாம்: இந்த டிப்ஸ் உதவும் title=

40 வயதிற்குப் பிறகு எடையை குறைப்பது எப்படி?

எந்த வயதினராக இருந்தாலும், எடை இழப்பு எளிதானது அல்ல. ஆனால் 40 வயதுக்கு மேலானவர்களுக்கு அது இன்னும் கடினமாகிறது. இந்த வயதில், வளர்சிதை மாற்றம் குறைகிறது மற்றும் எடை இழப்பதற்கு பதிலாக, அது அதிகரிக்கத் தொடங்குகிறது. 40 வயதிலும், 30 வயதிற்கு ஏற்ற அதே உணவு முறையை பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுவதற்கு இதுவே காரணம். 40 வயதில், எந்தவொரு நபரும் அதிக அறிவாளியாகவும், அனுபவம் வாய்ந்தவராகவும், தன்னம்பிக்கை கொண்டவராகவும் மாறுகிறார் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். 40 வயதிற்கு மேற்பட்டவர்களால் அவர்கள் நினைத்த காரியங்களை உறுதியுடன் செய்ய முடிகின்றது. இந்த காரணத்தினால், இந்த வயதில் வளர்சிதை மாற்றம் குறைகிறது, மேலும் எடை இழப்பது கடினமாகிறது. ஆனால் நீங்கள் விரும்பினால் இந்த வயதிலும் எடையை எளிதில் குறைக்கலாம். இதை எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
 
கார்போஹைட்ரேட்டை குறைக்க வேண்டாம்

கார்போஹைட்ரேட் நம் உடலில் எரிபொருளாக செயல்படுகிறது. இதை உணவில் இருந்து நீக்கினால் மலச்சிக்கல், சோர்வு மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 40 வயதிற்குப் பிறகு, தினசரி கார்போஹைட்ரேட் தேவை குறைகிறது. எனவே, உணவில் இருந்து கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக நீக்குவதற்குப் பதிலாக, அதைக் குறைக்கவும். ஒரு பெண்ணுக்கு தினமும் 40 முதல் 50 கிராம் கார்போஹைட்ரேட் தேவைப்படலாம். ஒரு ரொட்டி அல்லது அரிசி சாதம், பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் சாலட் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இத்தகைய உணவு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் எடை இழப்புக்கு உதவும்.
 
மேலும் படிக்க | பெப்டிக் அல்சர்: குடல் அழுக ஆரம்பிக்கும் - இந்த 5 அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்

உடலை இறுக்கம் இல்லாமல் தளர்த்திக்கொள்ளவும்

இந்த காலகட்டத்தில் வேலை காரணமாக மன அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இது அனைத்து வயதினரையும் மோசமாக பாதிக்கிறது. ஒருவர் நீண்ட நேரம் மன அழுத்தத்தில் இருந்தால், அவரது மன அழுத்த ஹார்மோன்கள் செயலில் இருக்கும். மன அழுத்தம் காரணமாக உடல் எடை கூடும். அத்தகைய சூழ்நிலையில், 40 வயதிற்குப் பிறகு, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க, மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடலை அமைதியாக படபடப்பு இல்லாமலும் வைத்திருக்க முயற்சிக்கவும்.
 
காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்

40 வயதிற்குப் பிறகு, சிலர் உணவு மற்றும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அனைத்து வகையான காய்கறிகளையும் உணவில் சேர்க்க வேண்டும். உணவில் அதிக காய்கறிகள் இருப்பது இரத்த சர்க்கரை அளவு, இன்சுலின் அளவு மற்றும் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. தினமும் இரண்டு முதல் மூன்று கப் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 
நல்ல தூக்கம் அவசியம்

நீங்கள் 40 வயதில் உடல் எடையை குறைக்க விரும்பினால், நல்ல தூக்கம் உங்களுக்கு உதவியாக இருக்கும். எனவே, உங்களின் உறக்க முறையை மாற்றி, முதலில் உறங்குவதற்கான நேரத்தைச் சரிசெய்யவும். நீங்கள் தூங்கும் படுக்கை வசதியாகவும், மெத்தை நன்றாகவும் இருக்க வேண்டும். தூங்குவதற்கு முன் மது அல்லது காஃபின் உட்கொள்ள வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் மூலம் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு எடை இழப்பு தொடங்குகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கருத்தரிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா? 5 முன்னெச்சரிக்கைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News