தாறுமாறா ஏறும் எடையை தடாலடியா குறைக்கணுமா? இந்த காலை உணவுகள் சாப்பிட்டா போதும்

Weight Loss Breakfast: காலையில் அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். எடை இழப்புக்கு உகந்த சில சிறந்த காலை உணவுகளை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 1, 2023, 02:42 PM IST
  • ஜிம் மற்றும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம்தான்.
  • உணவில் தேவையான மாற்றங்களைச் செய்வதும் இதற்கு இன்றியமையாதது.
  • இதில் காலை உணவிற்கு அதிக பங்குள்ளது.
தாறுமாறா ஏறும் எடையை தடாலடியா குறைக்கணுமா? இந்த காலை உணவுகள் சாப்பிட்டா போதும் title=

Weight Loss Breakfast: உடல் பருமன் இன்று மக்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஏற்படுத்தும் விளைவால் உடல் பருமன் துவங்குகிறது. உடல் பருமன் காரணமாக, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆபத்து அதிகரிக்கிறது. கூடுதலாக, எடை அதிகரித்தால் இளம் வயதிலேயே வயதான தோற்றமும் வரக்கூடும். தொப்பை கொழுப்பு (Belly Fat) அதிகரிப்பதாலும் உடல் எடை அதிகரிப்பாலும் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க மக்கள் இன்றைய காலத்தில் அதிக அளவில் ஜிம் செல்கிறார்கள், உடற்பயிற்சிகளை செய்கிறார்கள், கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். 

ஜிம் மற்றும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம்தான். உணவில் தேவையான மாற்றங்களைச் செய்வதும் இதற்கு இன்றியமையாதது என நிபுணர்களின் கூறுகிறார்கள். இதில் காலை உணவிற்கு அதிக பங்குள்ளது. காலை உணவில் குறைந்த புரதம் மற்றும் குறைந்த கலோரி உணவை உட்கொண்டால், அது உங்கள் பசியைத் திருப்திப்படுத்தாது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் காலையில் அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். எடை இழப்புக்கு (Weight Loss) உகந்த சில சிறந்த காலை உணவுகளை இந்த பதிவில் காணலாம்.

எடை இழப்புக்கான அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி காலை உணவுகள் 

புரத ஸ்மூத்தி

இந்த ஸ்மூத்தி செய்ய வறுத்த மக்கானா, கொண்டைக்கடலை, பாதாம் பால் மற்றும் அரை வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம். இவற்றை ப்ளேண்ட் செய்து காலையில் குடிக்கவும். இதனால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். கூடுதலாக, நீங்கள் போதுமான புரதத்தைப் பெறுவீர்கள்.

முளைத்த பயறுடன் அவல் 

இதில் அவலுடன் முளைத்த பயறு அல்லது பயத்தம்பருப்பைக் கலந்து சாப்பிடலாம். இது உங்கள் பசியைத் தணித்து, குறைந்த கலோரிகளை உங்களுக்கு வழங்குகிறது. இதனால் உங்கள் உடல் பருமன் அதிகரிக்காது. 

மேலும் படிக்க | Diabetes Diet: சுகர் லெவலை கட்டுப்படுத்த... வெள்ளரியை இப்படி சாப்பிட்டால் போதும்

கடலை மாவு டோக்லா

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு டோக்லா ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும். இது கடலை மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. காலை உணவாக டோக்லா சாப்பிடுவது உங்கள் பசியை தணிக்கிறது. வயிற்றில் நிரம்பி உணர்வு இருப்பதால், தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. டோக்லாவில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் அன்றாட தேவையை பூர்த்தி செய்கின்றன.

தயிர்

தயிரில் அதிக புரதம் உள்ளது. இதில் கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும், கலோரிகள் இதில் மிகவும் குறைவு. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் காலை உணவில் தயிர் சாப்பிடலாம். இதனுடன் அவலும் கலந்து சாப்பிடலாம்.

பயத்தம்பருப்பு அடை

பயத்தம்பருப்பு அடையில் சுரைக்காயை துருவி சேர்க்கலாம். இந்த அடையில் புரதம் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து உங்கள் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். இதனால் வெளியில் சாப்பிடும் எண்ணம் வராது. மேலும் உங்கள் உடல் பருமன் வேகமாக குறைய ஆரம்பிக்கிறது.

இது தவிர முட்டை, இட்லி, தோசை, பொங்கல், சியா விதைகள் போன்றவற்றை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடல் பருமனை போக்க, உணவோடு சேர்த்து, அன்றாட நடவடிக்கைகளில் உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தனியா: சுகர் லெவெல் முதல் இரத்த அழுத்தம் வரை.. அற்புதமான வீட்டு வைத்தியம், இப்படி உட்கொள்ளலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News