புதுடெல்லி: உடல் எடையை குறைப்பதற்காக பலரும் பல விதங்களில் முயன்றாலும், ஓட்ஸ் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்பது உங்களுகுத் தெரியுமா? உங்கள் எடை இழப்பு பயணத்தில், ஓட்ஸையும் சேர்த்துக் கொண்டால் அது ஆச்சரியமான பலன்களைத் தரும். ஓட்ஸ் ஆரோக்கியமான தானியங்களில் ஒன்றாகும், இது நீண்ட நேரம் பசி ஏற்படாமல் வைத்திருப்பது மட்டுமல்லாமல், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. உடல் எடை குறைப்பைத் தவிரவும், நமது உடலுக்குத் தேவையான முக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் நிறைந்த ஓட்ஸ், தானியங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது..
ஓட்ஸ் மற்றும் ஓட்மீல் (oatmeal) பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஓட்ஸை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் பருமன் குறையும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் மற்றும் இதய நோய்கள் குறையும்.
மேலும் படிக்க | உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமற்ற 5 உணவுகளின் பட்டியல்
ஓட்சை எப்படி சுவையான உணவாக்கலாம்?
ஒரு ஸ்பூன் சியா விதைகள், சிறிது வெண்ணெய் மற்றும் பால் (தேவைக்கு ஏற்ப) மற்றும் தேவைப்பட்டால் இனிப்புக்காக தேனை சேர்த்து, இவை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். இந்த ஓட்ஸ் கலவையை ஃப்ரிட்ஜில் வைக்கவும். காலையில் அதை எடுத்து, அதனுடன் நறுக்கிய பழங்களை சேர்த்தால், சுவையான எடை குறைப்பு மற்றும் ஓட்ஸ் தயார். வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் இந்த அருமையான காலை உணவு உடல் எடையும் குறையும். .
ஓட்ஸ் கிச்சடி
உங்கள் சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவை நீங்கள் சாப்பிட்டு முடித்தவுடன், உங்கள் மதிய உணவிற்கு நீங்கள் முயற்சி செய்யக்கூடிய ஓட்ஸ் ஒன்று ஓட்ஸ் கிச்சடி. பிரஷர் குக்கரை எடுத்து, அதில் தேவையான அளவு ஓட்ஸை வறுக்கவும், இப்போது உங்கள் விருப்பப்படி நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து, சுவைக்கு உப்பு மற்றும் மசாலாக்களை சேர்க்கவும். பனீர் அல்லது டோஃபு மற்றும் சிக்கன் க்யூப்ஸ் என புரதத்தின் சில ஆதாரங்களையும் இதில் சேர்க்கலாம்.
நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது மிளகாய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து சமைக்கவும். இது அருமையான மதிய உணவு. தேவையான ஊட்டச்சத்துக்களுடன் எடை குறைப்பு உணவாகவும் இது இருக்கிறது.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை
உங்கள் எடையைக் குறைக்கும் பயணத்தில் தோசையாக ஓட்ஸை சேர்த்துக் கொள்ளலாம். ஓட்ஸை வறுத்துக் கொண்டு, அதை ஊற வைக்கவும். பாசிபருப்பையும் ஊற வைத்து, அதில் ஓட்ஸ், பச்சை மிளகாய் மற்றும் சிறிது கறிவேப்பிலை, உப்பு சேர்த்து சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையுடன், நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சையாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். இந்த மாவை தோசையாக செய்து சாப்பிடவும்.
உங்கள் விருப்பம்போல சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம். இப்படி ஒரு தோசையை மிஸ் செய்துவிட்டேனே என்று வருந்த வேண்டாம். ஆனால், தோசையால் உடல் எடையைக் குறைப்பதை தெரிந்துக் கொள்ளாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் வேண்டுமானால் வரலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ