வீட்டில் இருந்தபடியே உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!

பிளாக் காஃபியில் குளோரோஜெனிக் அமிசம் உள்ளது, இந்த அமிலம் உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டி தேவையற்ற கொழுப்புகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.    

Written by - RK Spark | Last Updated : Aug 29, 2022, 06:04 AM IST
  • இஞ்சி உடலின் செரிமானத்தை சத்தியை அதிகப்படுத்த உதவுகிறது.
  • பெரும்பாலும் பலர் உடல் எடையை குறைக்க க்ரீன் டீயை குடிக்கின்றனர்.
  • பிளாக் காஃபி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
வீட்டில் இருந்தபடியே உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!  title=

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பல்வேறு உடற்பயிற்சிகள் செய்து கஷ்டப்படுவார்கள், அப்படி நீங்கள் தினசரி செய்யும் உடற்பயிற்சியோடு சேர்த்து சில இயற்கையான வீட்டிலேயே தயாரிக்க கூடிய பானங்களையும் பருகினால் விரைவில் உடல் எடை குறைந்து நீங்கள் பிட்டாக இருக்கலாம்.  இவ்வாறு நீங்கள் இயற்கையான பானங்களை குடிப்பதால் உங்களுக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது.  பொதுவாக இஞ்சி உடலின் செரிமானத்தை சத்தியை அதிகப்படுத்த உதவுகிறது, அதேபோல எலுமிச்சை உடல் எடை குறைப்பிற்கு உதவுவதாக நீண்ட காலமாக நம்பப்படுகிறது.  சிறிதளவு இஞ்சியை அரைத்து அதனுடன் சீராக தூள், தண்ணீர், எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து செய்யப்படும் பானத்தை குடித்து வர உடல் எடை குறையும்.  

தற்போது பெரும்பாலும் பலர் உடல் எடையை குறைக்க க்ரீன் டீயை குடிக்கின்றனர், ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து அதில் 6-7 புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து, அதில் இரண்டு ஸ்பூன் க்ரீன் டீயை போட்டு அதில் பாதியளவு எலுமிச்சை சாறு கலந்து வைத்து இந்த பானத்தை குடித்துவர உடல் எடை குறையும்.  அன்னாசிப்பழத்திலுள்ள மாங்கனீசு சத்து உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலில் தங்கியிருக்கும்  தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது.  சில அன்னாசிப்பழ துண்டுகளை அரைத்து சாறு எடுத்து அதில் எலுமிச்சை சாறு, பிளாக் சால்ட் மற்றும் இலவங்கப்பட்டை தூளை சேர்த்து பானமாக குடித்து வரலாம்.  பிளாக் காஃபியில் குளோரோஜெனிக் உள்ளது, இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.  இந்த பிளாக் காஃபியில் ஆளிவிதைகளை கலந்து அதனுடன் சுவைக்காக டார்க் சாக்லேட் சேர்த்து குடித்து வர உடல் எடை குறையும்.  

மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்

அடுத்ததாக இலவங்கப்பட்டை உடலில் 20% வெப்பத்தை அதிகரிக்கிறது, இதனால் கொழுப்புகள் உடலில் எரிக்கப்படுகிறது.  இதனை சாப்பிடுவதால் நமக்கு உணவுகளின் மீதான நாட்டம் கொஞ்சம் கட்டுக்குள் வருகிறது.  ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து அதில் 2 ஸ்பூன் இலவங்கப்பட்டை தூளை சேர்த்து ஆறவைக்க வேண்டும்.  பின்னர் அதனுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர உடல் எடை குறையும்.  இதுபோன்ற இயற்கையான பானங்களை நீங்கள் தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்ளும்போது உங்கள் உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் பிட்டாக இருக்கும்.

மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News