நீண்ட ஆரோகியமான வாழ்க்கை வாழ வேண்டுமா? இந்த ஐந்து அடிப்படை விதிகளை பின்பற்றுங்கள்!

Last Updated : Oct 28, 2016, 04:13 PM IST
நீண்ட ஆரோகியமான வாழ்க்கை வாழ வேண்டுமா? இந்த ஐந்து அடிப்படை விதிகளை பின்பற்றுங்கள்! title=

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதற்கேற்ப நாம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவற்றைப் பெற்றிருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். உடல்நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானது எனக் கூறுவர்.

ஆரோகியமான வாழ்க்கை இந்த ஐந்து அடிப்படை விதிகளை பின்பற்றுங்கள்:-

* ஆரோக்கியமான உணவு
      
தினமும் காய், பழங்கள், முழு தானியங்கள்இவை எடுத்துக்கொண்டால் ஆரோகியாமான வழக்கை பெறலாம்.

* உடற்பயிற்சி

உடற் பயிற்சி உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். நடத்தல், ஓடுதல், நீந்துதல், விளையாடுதல், நடனம் ஆடுதல், யோகாசனம் செய்தல் போன்றவை தினமும் செய்தால் ஆரோகியாமான வழக்கை பெறமுடியும்.

* சுகாதாரமாக வைத்து கொள்வது

ஆரோக்கியமாக உணவு உண்பதாலோ அல்லது உடற்பயிற்சியாலோ நமது உடல் முழமையான ஆரோகியம் அடையமுடியாது, நம்முடைய உடலை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும். 

* தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்

மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து உடல் ஆரோகியமாக இருக்கும்.

* போதுமான அளவு உறக்கம்

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 7-8 மணிநேரம் உறங்கும் நபர்களுக்கு 25% வரை இதய நோய்கள் குறைவாக தான் ஏற்படுகிறது என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எட்டு மணி நேரத்திற்கு அதிகமாக உறங்குபவர்கள் மத்தியில் இதய நோய் பாதிப்புகள் 146% அதிகமாக ஏற்படுகிறதாம். மேலும், குறைவான நேரம் உறங்குபவர்களுக்கு 22% அதிகமாக இதய பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.

Trending News