காலையில் எழுந்ததும் கண்ணாடியில் நம் முகத்தைப் பார்க்கும் போது, சோர்வான முகத்தைப் பார்க்க நாம் விரும்புவதில்லை. இதற்கு தீர்வுக்கான சிலர் கெமிக்கல் நிறைந்த கிரீம், ஃபேஸ் சீரம் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், நம் முகம் களங்கமற்றதாகவும் அழகாகவும் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று நம் மனம் முற்றிலும் குழப்பத்திலேயே இருக்கின்றது. எனவே பலரின் அறிவுரைகளால் நீங்களும் சிரமப்பட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. அதன்படி ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தி உங்கள் முகத்தை எப்படி அழகாக மாற்றலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ரோஸ் வாட்டர் வீட்டில் எப்படி செய்வது
ரோஜா இதழ்களை மட்டும் தனியாக எடுக்கவும். உலர்ந்து எடுத்தால் 1 கப் அளவு போதுமானது. பானையில் இதழ்கள் மற்றும் தண்ணீர் சேர்க்கவும். இதழ்கள் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்க்கவும். இதை அடுப்பில் வைத்து தண்ணீரை கொதிக்க வைக்கவும். அவை நன்றாக கொதித்து அதன் நிறங்கள் இழக்கும் வரை விடவும். தண்ணீர் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கட்டும். பிறகு இதை குளிரவைக்கவும். நன்றாக குளிர்ந்ததும் கலவையை வடிகட்டி இதழ்களை வெளியேற்றவும். மஸ்லின் துணியை கொண்டு வடிகட்டிவிடவும். இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி விடவும். ஒரு மாதம் வரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | இளநரை பிரச்சனை பாடாய் படுத்துதா? இந்த விஷயங்களில் கவனமா இருங்க
ரோஸ் வாட்டர் பயன்பாடு
ரோஸ் வாட்டரை நாம் தினமும் காலை மற்றும் இரவு தூங்கும் போது பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தும் போதெல்லாம், முதலில் ஒரு காட்டன் உருண்டையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உதவியுடன், ரோஸ் வாட்டரை முகம் முழுவதும் தடவவும். இவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் முகத்திற்கு நல்ல ஆக்ஸிஜன் கிடைத்து, முகம் பளபளப்பாக ஆக ஆரம்பிக்கும்.
மூங் தால் மற்றும் ரோஸ் வாட்டர்
ரசாயனம் நிறைந்த ஃபேஸ் வாஷ் மற்றும் ஸ்க்ரப் வாங்குவதை விட, சிறந்த ஃபேஸ் வாஷ் மற்றும் ஸ்க்ரப்பை வீட்டிலேயே தயார் செய்து கொள்வது நல்லது. இதற்கு மூங் தால்லை எடுத்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். நன்கு பொடியானதும் அதை ஒரு பாக்ஸில் நிரப்பி உங்கள் குளியலறையில் வைத்துக்கொள்ளவும், இப்போது தினமும் காலையில் ஃபேஸ் வாஷுக்கு பதிலாக ரோஸ் வாட்டர் மற்றும் முங் தால் பவுடர் ஒன்றாக கலந்து முகத்தில் பயன்படுத்தலாம்.
முல்தானி மிட்டி மற்றும் ரோஸ் வாட்டர்
முல்தானி மிட்டியை சாதாரண நீரில் ஊறவைத்து பேஸ்ட் வடிவில் தயார் செய்யவும். அதன் பிறகு, அதில் எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டர் கலக்கவும். அதன் பிறகு உங்கள் முகத்தில் நன்றாக தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். வாரத்தில் 2 நாட்கள் இப்படி செய்து வந்தால் முகத்தில் எந்த பிரச்சனையும் வராது.
மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ