Benefits of Jungle Jalebi: ஜலேபி என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயெ, ஒரு இனிமையான, மிருதுவான இனிப்பின் நினைவுதான் நமக்கு வரும். ஜங்கல் ஜிலேபி என்றழைக்கப்படும் கொடுக்காப்புளி (கொடுக்காய்ப்புளி) பழமும் அப்படித்தான். நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் இந்த பழத்தின் அறிவியல் பெயர் 'Pithecellobium dulce'. இது Madras Thorn என்றும் அழைக்கப்படுகின்றது.
கொடுக்காப்புளி பழம் பார்ப்பதற்கு புளியம்பழம் போலவே காணப்படுகின்றது. இது வடிவத்தில் ஜிலேபி போல வளைந்து இருக்கின்றது. பழுத்தவுடன், இந்த பழம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. கொடுக்காப்புளி பழம் இனிமையான சுவை கொண்டது. இதில் பல வித ஆரொக்கிய நன்மைகள் உள்ளன. புற்றுநோய் போன்ற தீவிர நோய்களிலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடுக்காப்புளி பழத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்:
- கொடுக்காப்புளி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
- இது ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிடெண்டாக செயல்படுகிறது.
- மேலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கிறது.
- கொடுக்காப்புளி பழத்தில் வைட்டமின் சி தவிர, புரதச்சத்து, நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தயாமின், ரைபோஃப்ளேவின் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பு கரைய, உடல் பருமன் உடனே குறைய.... காலையில் இதை செய்தால் போதும்
கொடுக்காப்புளி புற்றுநோய் போன்ற தீவிர நோய்களில் நன்மை பயக்கும்
கொடுக்காய்ப்புளியை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்தலாம். இந்த பழம் ஆயுர்வேத மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, இது புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதாகவும், இது புற்றுநோயைத் தடுக்க உதவுவதாகவும் ரிசர்ச் கேட்டில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடுக்காப்புளி: 100 -க்கும் மேற்பட்ட நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது
- கொடுக்காப்புளி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- இது வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
- குடல் தொடர்பான பிரச்சினைகளை சரி செய்ய கொடுக்காப்புளி பயன்படுத்தப்பட்டுள்ளது.
- இந்த பழம் 100 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு நன்மை பயக்கும் என கூறப்படுகின்றது.
கொடுக்காப்புளி பழம்: இதை சாப்பிடுவதற்கான சரியான வழி என்ன?
கொடுக்காப்புளி பழத்தை அப்படியே பச்சையாக உரித்து சாப்பிடலாம். அல்லது இதை காயவைத்து அரைத்தும் உட்கொள்ளலாம். பலர் இதை தயிருடன் கலந்து தயிர் பச்சடியாகவும் சாப்பிடுகிறார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை ஒட்ட விரட்ட.. டயட்டிலும் வாழ்விலும் இந்த மாற்றங்களை செய்தால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ