Hair Care Remedies In Tamil : முன்னர், வயதானவர்களுக்கும், நடுத்தர வயதினருக்கும்தான் அதிகளவில் முடி கொட்டி வந்தது. இதற்கு வயதும், மரபியல் மாறுபாடுகளும் காரணமாக கூறப்பட்டாலும் இளைஞர்களுக்கும் தற்போது முடி கொட்டுவது அதிகரித்துள்ளது என்ற உண்மையை யாராலும் மறுக்க இயலாது. இது போல முடி கொட்டுவதை தவிர்க்க பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் இருந்தாலும், ஒரு சில சிம்பிள் வீட்டு வைத்தியங்களால் இதை நிச்சயமாக சரிசெய்ய இயலும். அவை எந்த மாதிரியான வீட்டு வைத்தியங்கள்? இங்கு பார்ப்போம்.
முடி வளர்ச்சிக்கு உதவும் வெங்காயம்..
முடி உதிர்விற்கு, வெங்காய சாறு ஒரு ஆரோக்கியமான தீர்வாக அமைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு முடி பராமரிப்பு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும், ஆரோக்கியமான முடி வேரை அடையவும் வெங்காய சாறு உதவுகிறது. வெங்காய சாறினை முடியிலும் உச்சந்தலையிலும் சேர்க்கும் போது, முடி வளர்ச்சியடைய இதன் தன்மை உதவுகிறது. வெங்காயச் சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இது உதவியாக இருக்கிறது.
வெங்காயத்தில் இருக்கும் சல்ஃபர் சத்து, தலையில் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது. இது தலையில் இருக்கும் சரும செல்களையும் பாதுகாத்து முடி பளபளப்பாக மாற உதவி புரிகிறது. இந்த வெங்காய சாற்றினை எப்படி உபயோகிக்க வேண்டும்? இங்கு பார்ப்போம்.
கற்றாழையுடன் சேர்க்கலாம்..
வெங்காயத்தை பாதியாக வெட்டி, அதை உள்ள தண்ணீரை துணி வடிக்கட்டியின் உதவியுடன் வடிக்கட்டவும். கற்றாழை சாறை கொஞ்சமாக எடுத்து அதை நன்றாக கலக்கி வெங்காய சாற்றில் மிக்ஸ் செய்யவும். இரண்டும் நன்றாக கலந்தவுடன் ஒரு கிண்ணத்தில் அதனை மாற்றவும். சிறிது நேரம் இதை குளிர் சாதன பெட்டியில் வைத்திருக்கலாம். பின்னர் இதை வெளியில் எடுத்தால் உங்களது இயற்கையான ஹேர்-மாஸ்க் ரெடியாகிவிடும். இதை நேரடியாக தலை முடியில் தடவலாம். ஒரு மணி நேரம் கழித்து தலையை நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவைக் கொண்டு கழுவலாம்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் காலையில் இந்த 3 பால் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது!
முட்டையுடன் சேர்த்தும் உபயோகிக்கலாம்:
ஒரு முட்டையை எடுத்து, அதன் கருவில் இருந்து வெள்ளைகருவை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வெள்ளைக்கருவை வெங்காய சாறுடன் சேர்த்து கலக்கி தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஊறவைக்கலாம். பின்னர், சரியான ஷாம்பூவை வைத்து தலையை அலசலாம்.
வெங்காய சாறு மற்றும் தேன்:
ஃப்ரெஷ்ஷான வெங்காய சாறை எடுத்துக்கொண்டு, அதை ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக கலந்து தலையிலும் முடியின் நீளம் முழுவதும் தடவ வேண்டும். இதுவும் இயற்கை மாஸ்குகளும் ஒன்றாகும். தலையில் இவற்றை தடவிய பிறகு 15 நிமிடங்கள் ஊற வைத்து பின், தலையை அலச வேண்டும்.
தேங்காய் எண்ணெயும் வெங்காய சாறும்..
இந்த இயற்கை ஹேர் மாஸ்கை உருவாக்க, முதலில் வெங்காயத்தில் இருந்து ஃப்ரெஷ்ஷாக சாறினை எடுக்க வேண்டும். இதை தனியே ஒரு கிண்ணத்தில் சேர்க்க வேண்டும். இதனுடன் 2 முதல் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து தலையில் நன்றாக தேய்க்கும் போது மசாஜ் செய்ய வேண்டும். 20 முதல் 30 நிமிடங்களுக்கு இதை தலையில் ஊற வைத்து பின்னர் தலையை அலசலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுகர் லெவலை சுலபமா குறைக்க இந்த இயற்கை பானங்கள் சூப்பரா உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ