Crocodile Treatment: முதுகுவலிக்கு முதலை ட்ரீட்மெண்ட்! இது சீன மருத்துவம்

Crocodile Treatment: முதுகுவலியை நீக்கும் இந்த வழி உங்களை ஆச்சரியப்படுத்தும், சிகிச்சைக்காக முதலைகள் போல் சாலையில் ஊர்ந்து செல்லும் மக்களை சீனாவில் பார்க்கலாம் என்பது ஆச்சரியமாக இருந்தாலும், முதலையாய் ஊர்ந்து செல்லும் மக்களின் நம்பிக்கை சிந்திக்க வைக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 12, 2022, 08:46 AM IST
  • முதலைகள் போல் சாலையில் ஊர்ந்து செல்லும் மக்கள்
Crocodile Treatment: முதுகுவலிக்கு முதலை ட்ரீட்மெண்ட்! இது சீன மருத்துவம் title=

Crocodile Treatment: முதுகுவலியை நீக்கும் இந்த வழி உங்களை ஆச்சரியப்படுத்தும், சிகிச்சைக்காக முதலைகள் போல் சாலையில் ஊர்ந்து செல்லும் மக்களை சீனாவில் பார்க்கலாம் என்பது ஆச்சரியமாக இருந்தாலும், முதலையாய் ஊர்ந்து செல்லும் மக்களின் நம்பிக்கை சிந்திக்க வைக்கிறது. இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், நம் உடலை சரியான முறையில் பராமரிக்க முடிவதில்லை. இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக முதுகுவலி பிரச்சனை பொதுவானது. அதற்கு சிகிச்சையளிக்க பல வழிகள் உள்ளன. தற்போது முதுகு வலிக்கான பிரத்யேகமான முதலை சிகிச்சை சீனாவில் பிரபலமாகி வருகிறது.

முதுகுவலியை நீக்கும் முதலை சிகிச்சை, உங்களை ஆச்சரியப்படுத்தும், சிகிச்சைக்காக முதலைகள் போல் சாலையில் ஊர்ந்து செல்லும் மக்களை தற்போது சீனாவின் பல இடங்களில் காண முடிகிறது. உடலில் ஏற்படும் பிரச்சனைகள் தீவிரமடையும் போது, ​​சிகிச்சைக்காக நிறைய பணம் செலவழிக்கிறோம். மோசமான வாழ்க்கை முறையாலும், அலுவலகம், வீடு என பரபரப்பாக இயங்குவதாலும், முதுகு வலிதான் மிகப் பெரிய பிரச்சனையாக மாறியிருக்கிறது.

மேலும் படிக்க | தேனுடன் வாழை சேர்ந்தால் தித்திக்கும் அழகு! இது உலக அழகியாக ஆரோக்கிய டிப்ஸ்

இந்திய மக்கள் இந்த வகையான பிரச்சனைகளுக்கு யோகா மற்றும் உடற்பயிற்சியை தேர்ந்தெடுக்கும் அதே வேளையில், உலகில் சில நாடுகளில், முதுகு வலிக்கான சிகிச்சைக்கு விசித்திரமான நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றன. அத்ல் ஒன்றுதான் இந்த முதலை சிகிச்சை.

சீனாவில் முதுகு வலிக்கு மிகவும் பிரபலமாகி வரும் இந்த சிகிச்சை முறை முற்றிலும் மாறுபட்டது. இந்த வகை சிகிச்சைய்ல், மக்கள் முதலைகளைப் போல நடக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சீனாவின் சாலைகளில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் முதலைகள் போல ஊர்ந்து செல்வதை நீங்கள் பார்ப்பதற்கு இதுவே காரணம். இவ்வாறு நடப்பதன் மூலம் தமது பிரச்சினை முடிவுக்கு வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | Oats For Weight Loss: உடல் எடையை குறைக்க ஓட்ஸை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? 

இந்த சிகிச்சை முறை இப்போது சீனாவில் மிகவும் பிரபலமாகிவிட்டது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் இப்படி சாலையில் ஊர்ந்து செல்வதைக் காண முடிகிறது. சீனாவின் சியாங்ஷான் மற்றும் சான்ஷா நகரங்களில் இது அதிகம் பின்பற்றப்படுகிறது. இங்கு மக்கள் நீண்ட வரிசைகளை வைத்து இந்த சிகிச்சையை மேற்கொள்வதைக் காணலாம். உண்மையில் இது முதலை நடை என்று அழைக்கப்படுகிறது, அதற்காக தனி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

இதை செய்பவர்கள், இந்த நுட்பத்தால் தங்களின் வலி பிரச்சனை தீர்ந்துவிட்டதாக கூறுகின்றனர். ஒரு இளைஞன் 8 மாதங்களாக இந்த நுட்பத்தை பின்பற்றுவதாக கூறினார். இப்போது வலி நீங்கிவிட்டது. இருப்பினும், நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகள் இந்த பயிற்சியை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | இள நரை பிரச்சனையா... உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய ‘முக்கிய’ உணவுகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News