செரிமானம் முதல் நினைவாற்றல் வரை: இலவங்கப்பட்டையின் வியக்க வைக்கும் நன்மைகள்

Health Tips:ஆரோக்கியத்தின் ஒரு பொக்கிஷமாக விளங்கும் இலவங்கப்பட்டையின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 26, 2023, 09:08 AM IST
  • செரிமானம் சிறப்பாக இருக்கும்.
  • நினைவாற்றல் வலுப்பெறும்.
  • இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
செரிமானம் முதல் நினைவாற்றல் வரை: இலவங்கப்பட்டையின் வியக்க வைக்கும் நன்மைகள் title=

Health Tips: நமது இந்திய சமையல் நாவிற்கு சுவையை அளிப்பதுடன் உடலுக்கும் பல வித நன்மைகளை அளிக்கின்றது. நம் சமையலில் பயனப்டுத்தப்படும் நாட்டு காய்கள், பழங்கள், தானியங்கள், மசாலாக்கள் என அனைத்திலும் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அப்படி ஆரோக்கியத்தின் ஒரு பொக்கிஷமாக விளங்கும் இலவங்கப்பட்டையின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

இலவங்கப்பட்டை தண்ணீர் நன்மைகள் (Health Benefits of Cinnamon Water): 

இலவங்கப்பட்டை அதன் சிறந்த சுவை மற்றும் மணத்திற்கு பிரபலமானது. உணவிற்கு இது சேர்க்கும் சுவை மற்றும் நறுமணம் காரணமாக இது பலவிதமான உணவுகளின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் ஏராளமாக உள்ளன. இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், தினமும் ஒரு கிளாஸ் இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதால், நமக்கு கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் பற்றி கூறுகிறார். அந்த விவரங்களை இங்கே காணலாம். 

இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

1. செரிமானம் சிறப்பாக இருக்கும் (Home Remedy For Digestion) 

இலவங்கப்பட்டையில் இயற்கையான செரிமான பண்புகள் காணப்படுகின்றன. இது சிறந்த செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது. தினமும் இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதன் மூலம் வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் பெருமளவில் குணமாகும்.

2. நினைவாற்றல் வலுப்பெறும் (Home Remedy To Boost Memory Power) 

தினமும் இலவங்கப்பட்டை தண்ணீரை குடித்து வந்தால், அது நமது மூளை சிறப்பாக செயல்பட உதவும். இலவங்கப்பட்டை நமது செறிவு மற்றும் நினைவகத்தை வலுப்படுத்த உதவுகிறது. இது தவிர, இதன் மூலம் அல்சைமர் நோயின் அபாயத்தையும் குறைக்கலாம்.

மேலும் படிக்க | தொப்பையை கரைத்து உடல் எடையை குறைக்கும் 'ஹெல்தி ஸ்னாக்ஸ்': ஒல்லியாக ஒரு ருசியான வழி

3. இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் (Home Remedy For Heart Care)

இலவங்கப்பட்டை தண்ணீரை தொடர்ந்து குடிப்பவர்களின் நரம்புகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருக்கும். இது இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களைக் குறைக்க உதவி கிடைக்கும். 

4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் (Home Remedy For Immunity)

நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இலவங்கப்பட்டையில் காணப்படுகின்றன. இது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது சளி, இருமல், காய்ச்சல் போன்ற வைரஸ் நோய்களின் அபாயத்தையும் பெருமளவில் குறைக்கிறது.

5. சருமத்திற்கு நன்மை பயக்கும் (Home Remedy For Skin Care)

இலவங்கப்பட்டை நீர் வீக்கத்தைக் குறைத்து, ஆரோக்கியமான நிறத்தை மேம்படுத்தி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது முகப்பரு உட்பட பல சரும பிரச்சனைகளை நீக்கும்.

6. எடை இழப்பை ஊக்குவிக்கிறது (Home Remedy For Weight Loss)

இலவங்கப்பட்டை தண்ணீரை நச்சுநீக்கும், அதாவது டீடாக்ஸ் பானமாக அல்லது மூலிகை தேநீர் வடிவில் குடிப்பது வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இது கூடுதல் கிலோவை குறைக்க உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தீராத மலச்சிக்கலையும் தீர்த்து வைக்கும் சிறந்த ‘வெற்றிலை’ வைத்தியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News