இன்றைய காலகட்டத்தில், நவீன இணைய யுகத்தில், தூக்கமின்மை (Insomnia) என்பது பொதுவான பிரச்சனையாக உள்ளது. தூக்கமின்மை என்பது குறிப்பாக இளைஞர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை என்று கூட சொல்லலாம்.
இரவு முழுவதும் விழித்திருந்து, பகல் முழுதவதும் தூங்கும் பழக்கம் உள்ளது. இதனால், உடலின் ஒட்டுமொத்த செயல்பாடு, வேலை செயல்திறன் மற்றும் வாழ்க்கை தரம் ஆகியவை பெரிய அளவில் பாதிக்கக்கூடும். இந்த சிக்கலில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன.
தூக்கம் நன்றாக வருவதற்கு மெக்னீசியம் சத்து உதவுகிறது. ஏனெனில் மெக்னீசியம் சத்து மன அழுத்தத்தை போக்க பெரிதும் உதவுகிறது. இதனால் நன்றாக தூக்கம் வரும். பாதாம், பூசணி விதைகள், கீரை, வேர்க்கடலை போன்ற உணவுகளில் மெக்னீசியம் அதிகம் உள்ளது.
உடற்பயிற்சியும் தூக்கமின்மையை போக்க உதவும், ஏனென்றால், உடல் பயிற்சியில், உடல களைத்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.
ALSO READ | உணவில் மட்டுமல்லாது வாழ்க்கையிலும் சுவையை கூட்டும் உப்பு..!!
நறுமணம் என்பதே நம் மணதிற்கு இதமானது. குறிப்பாக லாவெண்டர் எண்ணெயின் நறுமணம் மன அழுத்தத்தை போக்கி, தூக்கத்தை வரவழைக்கும் திறன் கொண்டது. தூக்க பிரச்சனை உள்ளவர்கள் லாவண்டர் மணம் கொண்ட ரூம் ஸ்பேரேயை பயன்படுத்தலாம். அல்லது லாவண்டர் எண்ணையை வாங்கி வைத்துக் கொண்டு அதை நுகரலாம்.
யோகாவும் (Yoga) தூக்கமின்மையை விரட்ட சிறந்த ஆயுதம் ஆகும். இதனால் நன்றாக தூக்கம் வரும் என்பதோடு, உங்கள் நினைவாற்றல், செயல்திறன் ஆகியவை மேம்படும். இதன் மூலம் உங்கள் உடலை நன்றாக கட்டுகோப்பாக வைத்துக் கொள்ளலாம்.
தியானம் மனதை அமைதி படுத்தி, தூக்க மின்மை பிரச்சனையை போக்கும். அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, தியானத்தில் கவனம் செலுத்துங்கள். சுவாசம் சீராக இருக்க வேண்டும், தியானம் செய்யும் போது நேராக உட்கார்ந்திருக்க வேண்டும். இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செறிமானம் ஆகியவற்றையும் மேம்படுத்தும்.
ALSO READ | உணவே மருந்து: பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாகும் தயிர்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR