Health benefits of Ragi: பாரம்பரியமாக இந்தியாவில் உணவாக பயன்படுத்தப்படும் ராகி, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ராகியில் உள்ள புரத அளவானது அரிசியை விட இரு மடங்காக உள்ளது. அதிலும் ராகியில் உள்ள புரத தன்மை தனிச் சிறப்புமிக்கதாகும். அதிக உயிரியல் மதிப்புவாய்ந்த புரதத்தின் முக்கியப் பகுதியான எலோசினின் (eleusinin) ராகியில் உள்ளது.
உடலோடு எளிதாக கலந்துகொள்ளும் தன்மையுடைய எலோசினின் மட்டுமல்ல, ட்ரைப்டோபன், கிரிஸ்டைன், மெத்யோனைன், அமினோ அமிலங்கள்என பல கலவையான சத்துக்களைக் கொண்ட ராகி மனிதர்களுக்கு அருமருந்தாக பலனளிக்கிறது. இதுபோன்ற, பல்வேறு சத்துக்கள் கொண்ட தானியங்கள் மிகவும் குறைவாகவே உள்ளது.
தாதுப்பொருட்கள் செறிந்த ராகி
தாதுப்பொருட்கள் நிறைந்த தானியமான ராகி, பிற சிறுதானியங்களில் இருப்பதை விட சுமார் 20 மடங்கு கால்சிய சத்தைக் கொண்டது. மேலும், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் இதில் அதிக அளவில் உள்ளன.
மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!
கால்சியம் சத்து
எலும்பு உறுதிக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான தாதுப்பொருளான கால்சியம், ஆஸ்டோபேரிஸ் அல்லது குறைவான ஹீமோகுளோபின் அளவு உள்ள மனிதர்களுக்கு சிறந்த சிறுதானிய உணவாக இருக்கும்.
அனைத்து தானியங்களிலும் ராகி அதிகச் சத்து நிறைந்தது, தினமும் ஒருவேளை மட்டும் ராகியை உண்டால், உடல் உறுதி பெறும், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
தரமான புரதம்
சைவ உணவில் தரமான புரத உணவுகளின் பட்டியலில் ராகிக்கு முதலிடம் உண்டு. ஏனென்றால் ராகியில், மெத்யோனைன் புரதம் 5% அளவிற்கு உள்ளது. இதிலுள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து எடை இழப்புக்கு உதவுகிறது, மலச்சிக்கல் என்ற பெரும் பிரச்சனையை போக்குகிறது.
புற்றுநோயை எதிர்க்கும் திறன்
ராகியில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளதால், தொடர்ந்து ராகியை சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் மற்றும் நோயை ஏற்படுத்தும் செல்கள் உருவாகாது. அதோடு, செல்கள் சேதமடைவதால் உண்டாகும் வயது முதிர்ச்சியும் ஏற்படாது.
ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்
ராகியின் மேற்தோலில் உள்ள ஃபினொலிக் அமிலங்கள், ஃப்ளேவேனாய்டுகள் மற்றும் டன்னின்ஸ் ஆகியவை மிகச்சிறப்பான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் கூறுகளைக் கொண்டுள்ளன. பொதுவாக, சிறுதானிய உணவை உட்கொள்பவர்களுக்கு எசோஃபகீல் புற்றுநோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது.
மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!
நீரிழிவுக் கட்டுப்பாட்டில் ராகி
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகரித்து வந்தால், அவர்கள் தினசரி ராகி சாப்பிட்டால், பிரச்சனை சரியாகும்., கார்போஹைட்ரேட்டுடன் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் பலன்தரக்கூடிய ஃபைட்டோகெமிக்கல்ஸ் கொண்ட ராகி, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக்கும்.
ராகியை தோலுடன் பயன்படுத்துவதன் முக்கியத்துவம்
நார்ச்சத்து கொண்ட ராகியின் தோல்பகுதியில் உள்ள ஃபைட்டோகெமிக்கல்ஸ் வெளியேறாமல் இருக்க, ராகியை தோலுடன் பயன்படுத்த வேண்டும். ராகியின் மேற்புறத் தோலில் பாலிஃபினால்களின் அளவு அரிசி, மைதா மற்றும் கோதுமையுடன் ஒப்பிடுகையில் பெரும் செறிவுடன் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராகி இரத்த சர்க்கரை அளவு மற்றும் ஹைப்பர் க்ளைசீமிக் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு காயம் ஆறும் வேகம் அதிகரிக்கும் தன்மையையும் ராகி கொண்டுள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை
உணவை கெட்டுப்போகச் செய்யும் பாக்டீரியாவான பேசிலஸ் செரஸ், டைஃபாய்டு ஜூரத்தை ஏற்படுத்தும் சல்மொனெல்லா, முதற்கட்ட தோல் வியாதிகளான அரிப்பு, படை போன்றவற்றை ஏற்படுத்தும் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரிஸ் போன்ற பலவகை பாக்டீரியாக்களை எதிர்த்து செயலாற்றும் திறன் ராகியில் உள்ளது.
மேலும் படிக்க | Diabetes: கிடுகிடுவென அதிகரிக்கும் நீரிழிவு நோய்! கோவா மக்களே உஷார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ