Fertility diet: சில பெண்கள் விரைவாக கருத்தரிக்கலாம். மற்றவர்கள் பல ஆண்டுகளாக முயற்சித்தாலும் கர்ப்பம் தரிக்க கடினமாக இருக்கலாம். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை என்பது கட்டாயம் தேவைப்படலாம். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5ன் படி, இந்தியாவில், தற்போதைய கருவுறுதல் விகிதம், குறைந்து கொண்டே வருவதாக தெரிவித்துள்ளது.
எனவே, கருத்தரிப்பதற்கான போராட்டம் மிகப்பெரியது, ஆனால் சில வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றங்களைச் செய்வது கருத்தரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அந்தவகையில் சில உணவுகளையும் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
மேலும் படிக்க | மதுபிரியர்களுக்கான டிப்ஸ்! அதிக போதையால் ஹேங்கோவர் ஆனால் என்ன செய்வது?
கருத்தரிக்க உதவும் உணவுப் பட்டியல்:
சூரியகாந்தி விதைகள்: இந்த விதைகள் செலினியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் வளமான மூலமாகும், இவை ஆண் மற்றும் பெண் இனப்பெருக்கத்திற்கு முக்கியமானவை. கூடுதலாக, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் சூரியகாந்தி விதைகளில் ஏராளமாக காணப்படுகின்றன, சிறிய அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன.
சிட்ரஸ் பழம்: ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழங்கள் வைட்டமின் சி இன் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளன. திராட்சைப்பழங்கள் மற்றும் ஆரஞ்சுகளில் காணப்படும் புட்ரெசின் என்ற பாலிமைன், முட்டை மற்றும் விந்துகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பாலாடைக் கட்டி: இதில் பாலிமைன் புட்ரெசின் நிறைந்துள்ளது, இது விந்தணு ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக இருக்கலாம். ஆராய்ச்சியின் படி, பாலிமைன்கள் இனப்பெருக்க அமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
முழு கொழுப்புள்ள பால்: பால் பொருட்கள் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். "ஹார்வர்ட் ஆய்வின்படி, குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களை அதிகம் உட்கொள்பவர்களைக் காட்டிலும், முழு கொழுப்புள்ள பால் பொருட்களை உட்கொள்ளும் பெண்களுக்கு அண்டவிடுப்பின் பிரச்சினைகள் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீன்ஸ் மற்றும் பருப்பு: நார்ச்சத்து மற்றும் ஃபோலேட், இவை இரண்டும் ஆரோக்கியமான ஹார்மோன் சமநிலையைப் பாதுகாக்க அவசியம், பீன்ஸ் மற்றும் பருப்புகளில் நல்ல அளவில் காணப்படுகின்றன. கூடுதலாக, பாலிமைன் ஸ்பெர்மிடைன், முட்டையை கருத்தரிப்பதற்கு விந்தணுக்களுக்கு உதவும், பருப்பில் ஏராளமாக உள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | தூள் கிளப்பும் வெங்காயத்தோல்: இதில் இருக்கு சூப்பர் நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ