உங்கள் நாவின் நிறம் உங்கள் health secrets-ஐ உங்களுக்கு சொல்லி விடும்

நாவின் நிறத்தைப் பொறுத்து, நம் உடல்நலம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 30, 2020, 01:28 PM IST
  • நமது உடல்நலம் தொடர்பான பல ரகசியங்களையும் நமது நாக்கு அறிந்து வைத்துள்ளது.
  • நாக்கில் உருவாகும் கரும்புள்ளிகள் உடலில் இரத்தம் இல்லாததையும், நீரிழிவு நோயையும் குறிக்கின்றன.
  • பல வாரங்களுக்கும் மேலாக கொப்புளங்கள் அப்படியே இருந்தால், அவை அல்சராக மாறலாம்.
உங்கள் நாவின் நிறம் உங்கள் health secrets-ஐ உங்களுக்கு சொல்லி விடும் title=

புதுடெல்லி: நாக்கு நமது உடலில் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. நாம் பலதரப்பட்ட சுவைகளை அறிய உதவுவதோடு, நாம் பேசுவதற்கும் காரணமாக இருப்பது நமது நாக்கு (Tongue). ஆனால், நமது உடல்நலம் தொடர்பான பல ரகசியங்களையும் இது அறிந்து வைத்துள்ளது என்பது பலருக்கு தெரியாது. ஆம், நாவின் நிறத்தைப் பொறுத்து, நம் உடல்நலம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். புகைபிடித்தல், சிலவகை உணவுப் பொருட்கள் காரணமாக நாக்கில் மஞ்சள்-வெள்ளை நிற படலம் உறைந்து விடுகிறது. இருப்பினும், சில நேரங்களில் நாக்கு சிவப்பு, கருப்பு நிறமாக மாறுவதும் உண்டு.

உங்கள் உணவைத் தவிர, தூக்கமின்மை, நோய், பாக்டீரியா ஆகியவற்றாலும் நாவின் நிறம் மாறுகிறது. ஆரோக்கியமான நாவின் நிறம் வெளிர் இளஞ்சிவப்பு. இருப்பினும், நாக்கில் ஒரு வெள்ளைப் படலம் இருப்பதும் சாதாரணமாகவே கருதப்படுகின்றது. நாம் உண்ணும் சில உணவுப் பொருட்களின் மாவுப் பகுதி தங்கி விடுவதால் அது ஏற்படுகிறது. சரியாக நாவை சுத்தம் செய்து விட்டால் அது நீங்கி விடும்.

நாவின் நிறத்தை வைத்து ஆரோக்கியத்தின் ரகசியத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது என்று பார்க்கலாம்:

ஆழமான சிவப்பு நிறம் கொண்ட நாக்கு

இரத்த சோகை, சிவப்பு காய்ச்சல் காரணமாக நாவின் நிறம் அடர் சிவப்பு நிறமாக மாறக்கூடும். இது தவிர, இது வைட்டமின் பி 12 (Vitamin B12) குறைபாட்டின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதே நேரத்தில், நாவின் கீழ் பகுதி அடர் சிவப்பு நிறமாக மாறினால், குடலில் வெப்பம் அதிகரித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ALSO READ: Health News: உடல் எடை குறைய Black Coffee-யா, Green Tea-யா? எது சிறந்தது?

நாக்கில் உறைந்த மஞ்சள் படலம்

நாக்கில் அடர்த்தியான மஞ்சள் படலம் இருந்தால் நீங்கள் அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்கிறீர்கள் என பொருள். இது தவிர, கல்லீரல், அல்லது வாயில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் இருப்பதால், நாக்கில் மஞ்சள் படலம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாய் துர்நாற்றம், சோர்வு, காய்ச்சல் ஆகியவையும் ஏற்படக்கூடும்.

அடர் பழுப்பு நிறம்

அதிகப்படியான காஃபி, புகைபிடித்தல் அல்லது ஆல்கஹால் காரணமாக நாக்கு அடர் பழுப்பு நிறமாக மாறும். இருப்பினும், அதைப் புறக்கணிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.

நாக்கில் கொப்புளங்கள்

சில நேரங்களில் தற்செயலாக நாக்கை கடித்துக்கொண்டாலோ, உலர்ந்த அல்லது காரமான உணவை உட்கொண்டாலோ வாயில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அதையும் புறக்கணிக்காதீர்கள். பல வாரங்களுக்கும் மேலாக கொப்புளங்கள் அப்படியே இருந்தால், அவை அல்சராக (Ulcer) மாறலாம். காரணமே இல்லாமல் கொப்புளங்கள் வந்தால், அது ஹார்மோன் ஏற்றத்தாழ்வின் (Hormone Imbalance) அறிகுறியாக இருக்கலாம்.

நாக்கில் கரும்புள்ளிகள்

நாக்கில் உருவாகும் கரும்புள்ளிகள் உடலில் இரத்தம் இல்லாததையும், நீரிழிவு நோயையும் (Diabetes) குறிக்கின்றன. இது தவிர, வாயில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் (Bacteria) இருப்பதாலும், நாக்கில் கரும்புள்ளிகள் தோன்றும்.

(குறிப்பு: உங்கள் உடல் தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு மருத்துவர்களின் முறையான ஆலோசனையைப் பெறுவது மிக முக்கியம்)

ALSO READ: நட்சத்திர சோம்பின் ஆரோக்கிய நன்மைகள்: சமையலறையில் உள்ள ரகசிய பொருள்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News