Tips To Prevent Baldness And Hairfall : வயதானவர்கள் பலர், தலையில் முடியின்றி இருப்பதையும், வழுக்கையுடன் இருப்பதையும் பார்த்திருப்போம். முன்னர், வயதானவர்கள்தான் இப்படி வழுக்கையுடன் இருந்தனர். ஆனால், இப்போது இளஞர்கள் பலருக்கே முடி விழ ஆரம்பித்து, சீக்கிரமாக வழுக்கை விழ ஆரம்பித்திருக்கிறது. இதற்கு பின்னால், நமது வாழ்வியல் நெறிமுறைகள், மரபு வழி காரணங்கள் என பல காரணங்கள் இருக்கலாம். மரபு வழி குறைபாடுகள், வாழ்வியல் மாற்றங்கள், உபயாேகிக்கும் தண்ணீர் என பல காரணங்கள் இதற்காக அடுக்கப்படுகின்றன. இப்படி முடி கொட்டுவதில் இருந்து தப்பிக்க சில உணவுகளை சாப்பிட வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
பசலைக்கீரை:
பொதுவாகவே கீரை வகைகளை தினசரி டயட்டில் சேர்த்துக்கொள்வதால் பல வகையான நன்மைகள் ஏற்படுகின்றன. பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளன. இந்த கீரையில் வைட்டமின் சி, கரோடின் சத்ஹ்தும் உள்ளது. இந்த சத்துகள், முடி பாதுகாப்பினை உறுதி செய்கிறது. முடி உடைவதையும் உதிர்வதையும் தவிர்க்கலாம்.
தயிர்:
தயிரில் கால்சியம் சத்துகள் அதிகமாகவே உள்ளன. இது, ஆண்களை விட பெண்களுக்கு அதிக பலன்களை தரும் என கூறப்படுகிறது. அதிலும், புளித்த தயிரில் பி 5 சத்துக்கள் உள்ளதாம். இதனால் தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் முளையில் ரத்த ஓட்டம் சீராகி, முடி ஆரோக்கியமாக வளர உதவும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் சத்தும் ஆண்டி ஆக்சிடன்ஸ் சத்தும் அதிகமாக உள்ளன. இதை சாப்பிடுவதால் முடி வறட்சியாவதை தவிர்த்து, மேலும் எந்த முடி பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். இதை சாப்பிடுவதால் தலையில் ஈரப்பதம் இருக்கும். முடி வெடிப்பை ஏற்படாமலும் தவிர்க்கலாம்.
சால்மன் மீன்:
மீன் வகைகள், கண்களுக்கும் முடி வளர்ச்சிக்கும் நல்லது என கூறுவர். அதிலும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி மீனும் ஒமேகா 3 அமிலங்களை கொண்டிருக்கிறது. முடி கொட்டுவதை தவிர்க்க, வாரத்திற்கு இரண்டு முறை மீன் சாப்பிட்டால் நன்று என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | எலும்பு தேய்மானம் முதல் ஹார்மோன் பிரச்சனை வரை! கால்சியம் குறைவை சரிசெய்ய டிப்ஸ்!
வேறு என்னென்ன செய்யலாம்?
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்:
மன நலனும் உடல் நலனும் நலமாய் இருந்தால் மட்டுமே நமது ஒட்டுமொத்த உடல் நலனும் நன்றாக இருக்கும். எனவே, அதை பேணி பாதுகாக்க வேண்டியது நலம். சரியான உணவுகளை சாப்பிட்டு, மனதை மகிழ்ச்சிப்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும்.
சரியான தூக்கம்:
மனிதனுக்கு நல்ல தூக்கம் இருந்தாலே வாழ்வில் உள்ள பல பிரச்சனைகள் விரைவில் தீர்ந்து விடும் என்கின்றனர், மருத்துவர்கள். அந்த தூக்க நேரத்தில்தான் நாம் முடி வளர்வதற்கும் சரியான நேரம் கிடைக்கும். எனவே, தினசரி 7-8 மணி நேரம் நன்றாக தூங்குகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
சரியான எண்ணெய்:
தலைக்கு போடும் ஷாம்பூ, எண்ணெய் ஆகியவை உங்களது முடிக்கு உகந்ததாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மூலிகை எண்ணெயாக இருந்தாலும், கடையில் விற்கப்படும் எண்ணெயாக இருந்தாலும் அவற்றை கண்டிப்பாக செட் ஆனால் மட்டும் உபயோகிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ