Weight Loss Drink: ஃபிட்னஸ் மற்றும் ஃபேஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த காலகட்டத்தில், எல்லோரும் ஃபிட்டாக இருக்கவே விரும்புகிறார்கள், ஆனால் தற்போதைய வாழ்க்கை முறையில், இந்த ஆசை பெரும்பாலானோருக்கு நிறைவேறமலேயே உள்ளது. துரித உணவுப்பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறை காரணமாக பெரும்பாலோனோர் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமனால் பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு இந்த மேஜிக் வெயிட் லாஸ் பானம் மிகவும் உதவியாக இருக்கும்.
உடல் எடையை குறைக்க இலவங்கப்பட்டை மற்றும் தேன் பெரிதும் உதவும் எஎன்கிறார் நாட்டின் பிரபல ஆயுர்வேத மருத்துவர் அப்ரார் முல்தானி. இலவங்கப்பட்டை மற்றும் தேன் ஆகியவை கொழுப்பை கரைக்கும் தன்மையை கொண்டிருக்கின்றன என்பதால், எடையைக் கட்டுப்படுத்தவும், உடல் பருமனை குறைக்கவும் இது பெரிதும் உதவும் என்கின்றனர். அதை மூன்று வகையிலான மேஜிக் பானமாக தயாரித்து அருந்தினால், கை மேல் பலன் உண்டு.
ALSO READ | Jaggery: இரவு நேரத்தில் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!!
எடை இழப்புக்கு இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த மூன்று மேஜிக் பானங்கள்
1. இலவங்கப்பட்டை - தேன் கலந்த பானம்
ஒன்றரை கப் தண்ணீரில் ஒரு துண்டு இலவங்கப்பட்டை சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின் ஒரு கோப்பையில் வடிகட்டி எடுத்து கொள்ளவும். இப்போது அதில் இரண்டு ஸ்பூன் தேன் கலக்கவும். சாதாரண தேநீர் போல மெதுவாக பருகவும். தினமும் ஒரு கப் அருந்தலாம்.
2. கிரீன் டீ - இலவங்கப்பட்டை - தேன்
முதலில், ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். பிறகு இந்த தண்ணீரில் ஒரு டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். இப்போது ஒரு கோப்பையில் கால் டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை போடவும். பிறகு அதில் இரண்டு ஸ்பூன் தேன் கலக்கவும். இப்போது தேன் மற்றும் இலவங்கப்பட்டை கொண்ட ஒரு கோப்பையில் இந்த கிரீன் டீ தண்ணீரை வடிகட்டவும். இந்த மூன்றையும் நன்றாக கலந்து சாப்பிடவும். தினமும் ஒரு கப் சாப்பிடலாம்.
ALSO READ | வெள்ளை அரிசி Vs பழுப்பு அரிசி: எது சிறந்த தேர்வு; ஊட்டச்சத்து நிபுணர் கூறுவது என்ன..!!
3. இலவங்கப்பட்டை - தேன்- எலுமிச்சை
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். இதற்குப் பிறகு, ஒரு கோப்பையில் கால் டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் போடவும். இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலக்கவும்.
கொதிக்க வைத்த தண்ணீரை கோப்பையில் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அதை மெதுவாக அருந்தவும்.
இதை ஒரு நாளைக்கு ஒரு முறை உட்கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
ALSO READ | Weight loss Yoga: தொப்பை குறைய ‘இந்த’ ஆசனம் செய்தால் போதும்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR