பக்கவாதம் என்பது மூளை செல்கள் திடீரென இழப்பு அல்லது இரத்த தகடு காரணமாக மூளை செல்கள் இறப்பு ஆகும். இந்தியாவில் 40 வயதிற்குட்பட்டவர்களில் 10-15 சதவீதத்திற்கும் அதிகமானோர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக இளம் வயதினரே அதிகளவில் மூலம் பக்கவாத நோய்க்கு ஆளாவதாக கூறப்படுகிறது, இதற்கு காரணம் அவர்களுடைய ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் அவர்களின் தொழில் மற்றும் குடும்ப வாழ்வில் அதிகரிக்கும் மன அழுத்தம் ஆகியவை தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
1) ஒரு நபர் நீண்ட காலமாக மது அருந்தினால் அவரது தமனியில் மாற்றங்கள் ஏற்பட்டு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்றவை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மது அருந்துவது தவிர்ப்பதன் மூலம் மூளை பக்கவாதம் வராமல் பாதுகாக்கலாம்.
2) புகைபிடிப்பது மூளை மற்றும் இதயம் சம்மந்தமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய கொடிய பழக்கமாகும்.
மேலும் படிக்க | பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம்
3) பொதுவாக சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுவது நல்லது,சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுவது உங்கள் மூளைக்கு நல்லது. உதாரணமாக இப்போது நீங்கள் ஒருநாள் காலை 5 மணிக்கும், ஒருநாள் காலை 7 மணிக்கும் எழுந்திருக்கும்பொழுது உங்களுடைய மூளை குழப்பமடையும். அதனால் சரியான தூக்க முறையை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
4) நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உண்ண வேண்டும். செரிமானத்துக்கு, மூளைக்கும் கூட தொடர்புள்ளது, உணவுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இல்லை என்றால் மூளை தொந்தரவு செய்யும். மூளைக்கு உடலின் தேவைகள் குறித்து தெரியும், அதனால் தினமும் போதுமான அளவு திரவங்களை குடிப்பது மற்றும் அதிக நார்ச்சத்துள்ள உணவை சாப்பிடுவது போன்றவற்றை செய்யவேண்டும்.
5) மன அழுத்தம் பல நோய்களுக்கு ஒரு திறவுகோல், மன அழுத்தத்தை நீக்குவது ஒரு நபரின் வாழ்க்கை முறையை பெரிதும் மேம்படுத்தும். பெரும்பாலும் இளைய தலைமுறையினர் தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர், இதனால் அதிகளவில் இளைஞர்களுக்கு மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. மன அழுத்தத்தால் உடல்நலம் மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
6) தினமும் 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென அழுத்தம் கொடுப்பது மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது. ஆரம்பத்தில் லேசான பயிற்சிகளை செய்து அதன்பின்னர் மெதுமெதுவாக கடினமான பயிற்சிகளை செய்யலாம்.
மேலும் படிக்க | பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ