குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் . உணவில் ஊட்டச்சத்து சரியான அளவில் இல்லை என்றால், குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி சாத்தியமில்லை. குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு அல்லது குறைபாடு என்பது அவர்களது உடல் நலத்தில் மட்டுமல்ல, மன நலன் மற்றும் தன்னம்பிக்கையை பாதிக்கும். குழந்தை பிறந்தது முதலே பெற்றோர்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவை கொடுத்து பசியாற்ற வேண்டும் என்பது பற்றி மட்டுமல்லாமல் குழந்தைக்கு சரியான அளவிலான ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் உணவுகள் கொடுக்கப்படுகின்றதா என்பதிலும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். இப்போதெல்லாம் குழந்தைகள் ஃபாஸ்ட் மற்றும் ஜங்க் ஃபுட்களை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை அவை நல்லதல்ல. எனவே குழந்தைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவாது. அதனால் உடல் பருமன் ஏற்படுமே தவிர, உயரம் கூடாது.
குழந்தைகளின் உயரம் அதிகரிக்க கொடுக்க வேண்டிய உணவுகள்:
பாதாம்
காலையில் ஒரு கைப்பிடி ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது உங்கள் குழந்தையின் அறிவாற்றலை மட்டுமல்லாது, உயரத்தையும் அதிகரிக்கும். ஏனெனில் பாதாம் புரதத்தின் சிறந்த மூலமாகும், இதில் ஏராளமான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை செல்களில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதுடன் எலும்பு அடர்த்தியை மேம்படுத்த உதவும். இதனால் எலும்புகள் வலுப்பெற்று உயரம் அதிகரிக்க உதவும். பாதாமில் நார்ச்சத்து, மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் E ஆகியவை நிரம்பியுள்ளன. இது கொழுப்பை கரையக்கூடிய வைட்டமின் என்பதால் எலும்புகளின் சிறந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிக்கன்
புரதம், வைட்டமின் B12, நியாசின், செலினியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் B6 ஆகியவற்றின் சிறந்த கலவையாக சிக்கன் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், செல்களை சரிசெய்யவும், உங்கள் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்கவும் உதவுகின்றன. மேலும் நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி12 இருப்பது உயரத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், பிராய்லர் கோழிகளை காட்டிலும் நாட்டு கோழிகளை குழந்தைகளின் உணவில் சேர்த்து கொள்ளது தான் நல்லது.
முட்டை
முட்டை சூப்பர் புட் என அறியப்படுகிறது. இதில், புரதம் கார்போஹைட்ரேட் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. காலை உணவில் உங்கள் குழந்தைகளுக்கு வேகவைத்த முட்டை கொடுப்பது மிகவும் சிறந்தது. இது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் சாதகமான விளைவை ஏற்படுத்தும். முட்டையின் வெள்ளைக் கருவில் குளோரின், மெக்னீஷியம், பொட்டாஷியம், சோடியம், சல்பர், துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களும், மஞ்சள் கருவில் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 போன்ற வைட்டமின்களும் அடங்கியுள்ளன. இவை குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்
சோயா பீன்ஸ்
உயரத்தை அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவுகளில் சோயா பீன்சும் ஒன்று. சிக்கன், முட்டை பிடிக்காத குழந்தைகளுக்கு இதனை கொடுக்கலாம். இவற்றில் புரதசத்து அதிக அளவில் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் சிறப்பாக உதவும். அத்துடன் முழு உடல் வளர்ச்சிக்கும் இது சிறந்தது.
மேலும் படிக்க | கெட்ட கொழுப்பால் அவதியா? இந்த ஏழரையில் இருந்து விடுவிக்க உதவும் 7 பானங்கள்
பீன்ஸ்
பீன்ஸ் உயரமாக வளர வியக்கத்தக்க அளவில் உதவும். இது தசை வலிமை, அறிவாற்றல் வலிமை மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதில் புரதங்கள், இரும்பு மற்றும் பி வைட்டமின்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. செல் மற்றும் திசு மீளுருவாக்கத்தையும் இது ஊக்குவிக்கிறது. இதுமட்டுமின்றி, நார்ச்சத்து, தாமிரம், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் தினசரி உணவில் பீன்ஸ் சேர்த்துக் கொள்வதால், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
தயிர்
தயிரில் கால்சியம், பால் கொழுப்பு மற்றும் புரதம் அதிகமாக உள்ளது. இது எலும்புகள், தசைகளை வலுப்படுத்தவும் எலும்பின் அடர்த்தியை பராமரிக்கவும் உதவுகிறது. கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தையின் வளர்ச்சியில் மாற்றத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பால்
ஏறக்குறைய அனைத்து வகையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இதில் காணப்படுவதால், பால் ஒரு முழுமையான உணவு என்பதில் சந்தேகமில்லை. இதில் உள்ள கால்சியம் மற்றும் புரோட்டீன் குழந்தைகளின் எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கின்றன, எனவே உங்கள் குழந்தைகளுக்கு காலையிலும் மாலையிலும் பால் கொடுங்கள். இதனால் குழந்தைகளின் வளர்ச்சியும் சீராக அதிகரிக்கிறது.
கீரை
கீரையில், இரும்பு, மெக்னீசியம், நார்ச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ ஆகியவை உயரம் அதிகரிக்க உதவும். இதிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க உதவும். கீரை மட்டுமல்லாது, முட்டைகோஸ், பிராக்கோலி ஆகிய பச்சை காய்கறிகளில் காணப்படும் கால்சியம் குழந்தைகளின் எலும்பு மறு உருவாக்கம், எலும்பு திசுக்கள் உருவாக்கத்திற்கு உதவுகிறது.
பழங்கள்
வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுக்கு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க இன்றிலிருந்து குழந்தைகளுக்கு பழங்களை ஊட்டத் தொடங்குங்கள். சீசனில் கிடைக்கும் பழங்களை கொடுப்பது மிகவும் சிறந்தது. ஏனேனில் சீசனில் கிடைக்கும் அந்தந்த பழங்களை உட்கொள்வதன் மூலம் அதன் ஊட்ட சத்துக்களை முழுமையாக பெறலாம்.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகளில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், வைட்டமின் பி போன்ற முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ள. அவை உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் உயரத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே குழந்தைகளுக்கான உணவுகளில் தினமும் பருப்புகளை சேர்க்க வேண்டும். இது குழந்தைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நீரிழிவு நோய் இருப்பவர்கள் இந்த 3 ஜூஸ் குடித்தால் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ