நீரிழிவு நோய் என்பது ஒரு முறை வந்தால், அது வாழ்நாள் முழுவதும் பிரச்சினையாகவே இருக்கும், உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளால் இதற்கு ஒரு திடமான சிகிச்சையை கண்டுபிடிக்க முடியவில்லை. போதுமான அளவு இன்சுலினைச் சுரக்க முடியாதபோது ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மீற தொடங்குகிறது. பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் கவனம் செலுத்தவில்லை என்றால், அவர்களுக்கு பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது, எனவே நாம் சரியான உணவைத் தேர்ந்தெடுத்து அதைத் தொடர்ந்து பின்பற்றுவது முக்கியம்.
இந்த நிலையில் இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் 'நிகில் வாட்ஸ்' ஜீ நியூஸ் இடம் இது தொடர்பாக கூறியதாவது, நாம் சில குறிப்பிட்ட பானத்தை குடித்தால், சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு சீராக இருக்கும், இதனால் உடல் பருமன் மற்றும் இதய நோய் பாதிப்பும் குறையும்.
மேலும் படிக்க | சர்விகல் கழுத்து வலியால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும்
நீரிழிவு நோயாளிகளுக்கு கொய்யா மற்றும் இளநீரின் உதவியுடன் ஒரு சிறப்பு பானத்தை தயாரிக்கலாம், இது ஒவ்வொரு பருவத்திலும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த பழங்களின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம், ஆனால் இந்த இரண்டின் கலவையும் நீரிழிவு போன்ற நோய்களை எவ்வாறு எதிர்த்துப் போராடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் நாம் தெரிந்துக்கொள்வோம்.
நீரிழிவு நோயை இளநீர் எவ்வாறு எதிர்த்துப் போராட உதவுகிறது?
இளநீரில் அதிக எலக்ட்ரோலைட்டுகள் காணப்படுகின்றன, இது உடலில் பிஎச் அளவை சமநிலையில் பராமரிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. தேங்காயில் இயற்கையான சர்க்கரை உள்ளது, அது நார்ச்சத்து மற்றும் புரதத்தின் வளமான மூலமாகும். இதில் கலோரிகள் மிகக் குறைவு, இதன் காரணமாக கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்பட்டு நீரிழிவு நோய்க்கு நிவாரணம் அளிக்கிறது.
இரத்த சர்க்கரை அளவை கொய்யா பழ ஜூஸ் கட்டுப்படுத்தும்
கொய்யா பழத்தில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது, இது நீரிழிவு உணவின் சிறப்பு பண்பு, கொய்யாவின் செரிமானம் மெதுவாக நடக்கிறது, இதனால் இது குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கிறது. அதேபோல் கொய்யாவில் சோடியம் மற்றும் கலோரிகளில் அதிகமாக இல்லை, அத்துடன் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் ஏராளமாக காணப்படுகின்றன. எனவே, இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எளிதில் கட்டுப்படுத்த உதவுகிறது.
கொய்யா மற்றும் இளநீர் வைத்து ஜூஸ் தயாரிப்பது எப்படி?
முதலில், 2 முதல் 3 நடுத்தர அளவிலான கொய்யாவை தோலுரித்து, அதை மிக்ஸியில் அரைத்து, விதைகளை வடிகட்டி, பிரிக்கவும். பிறகு இந்த கொய்யா ஜூஸ்ஸில் ஒன்று முதல் ஒன்றரை டம்ளர் இளநீரை கலந்து, இப்போது எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிறிய ஸ்பூன் இஞ்சி விழுது சேர்த்து, சுவை அதிகரிக்க விரும்பினால், துளசி இலைகளை பொடியாக நறுக்கி அலங்கரித்து குடிக்கவும். இந்த ஜூசை தினமும் காலை உணவில் சேர்த்துக்கொண்டால் உங்களின் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Weight Loss Tips: தொப்பையை குறைக்கணுமா? இப்படி செஞ்சி பாருங்க, சட்டுனு குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ