நீரிழிவு நோயாளிகள் இனிப்புகளை சாப்பிடாமல் இருக்க சில வழிகள்!

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 12-15 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும், ஏனெனில் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏற்படும்.  

Written by - RK Spark | Last Updated : Nov 1, 2022, 06:31 AM IST
  • நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பு சாப்பிடுவது ஆபத்தான ஒன்று என்று கருதப்படுகிறது.
  • இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தையும் கட்டுப்படுத்த சில வழிமுறைகள் உள்ளது.
  • ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 12-15 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் இனிப்புகளை சாப்பிடாமல் இருக்க சில வழிகள்!  title=

பெரும்பாலான இந்தியர்கள் இனிப்புகளை விரும்பி சாப்பிடுவார்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பு சாப்பிடுவது ஆபத்தான ஒன்று என்று கருதப்படுகிறது.  ஆனால் சில மாற்றங்களை உணவில் செய்வதன் மூலம் அவர்களும் இனிப்புகளை சாப்பிடலாம், அதேசமயம் இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தையும் கட்டுப்படுத்த சில வழிமுறைகள் உள்ளது.  இனிப்புகள் அதிக கிளைசெமிக் கார்போஹைட்ரேட்டுகளால் தயாரிக்கப்படுகின்றன, அதில் நீங்கள் நட்ஸ் மற்றும் விதைகளை சேர்ப்பதால் கிளைசெமிக் குறையும், மேலும் அதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.  பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, பூசணி விதைகள், சியா விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்ற விதைகளை உணவில் சேர்க்கலாம்.  உணவில் புரதசத்து இடம்பெற வேண்டியது அவசியம், பன்னீர் டிக்கா, சோயாபீன் சாப், சோயா தின்பண்டங்கள் அல்லது வறுத்த கோழி இறைச்சி போன்றவற்றை உட்கொள்ளலாம்.  

மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் பருமனை குறைக்க என்ன செய்ய வேண்டும்

நீரிழிவு நோயாளிகளின் தினசரி உணவில் புரதசத்து இருப்பதை உறுதிசெய்ய வேண்டும், பால் பொருட்கள், பருப்பு வகைகள் அல்லது நட்ஸ் வகைகள் மற்றும் விதைகள் என எதையாவது உணவில் சேர்த்து கொள்ளலாம்.  மைதாவில் செய்யப்பட்ட உணவு வகைகளை நீரிழிவு நோயாளிகள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், அதற்குப் பதிலாக முழு தானியங்கள் மற்றும் தினையைப் பயன்படுத்தி இனிப்பு பதார்த்தங்களை செய்து சாப்பிடலாம்.  இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த கடைகளில் வாங்கும் இனிப்புகளை சாப்பிடாமல் வீட்டிலேயே தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

இனிப்பை முழுவதுமாக கைவிட முடியாதவர்கள் மாற்று வகை இனிப்பை உட்கொள்ளலாம், அதாவது கருப்பு திராட்சை, திராட்சை, மேப்பிள் சிரப், ஆப்பிள், சாஸ் போன்ற இயற்கை இனிப்புகளை எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 12-15 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும், ஏனெனில் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏற்படும்.  இனிப்புகளை சாப்பிட்டாலும் கூடவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும்.  பழங்கள், காய்கறிகள், சூப்கள் அல்லது சாலடுகள் வடிவில் ஒவ்வொரு நாளும் சுமார் 25-30 கிராம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  மேலும் உடலின் சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப இனிப்பு உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

மேலும் படிக்க | வெள்ளை முடியை கருமையாக்க இந்த மரத்தின் இலைகளை பயன்படுத்துங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News