பொதுவாக கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால் நாம் அதிக அளவில் வருந்துகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு எது பொருத்தமான ஸ்கின் கேர் டிப்ஸ் என்பதை தெரிந்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
அதேபோல் சில சமயங்களில் சில ஸ்கின் கேர் டிப்ஸ் நமக்கு நல்லதை செய்வதற்கு பதில் அதிக தீங்கு விளைவிக்கக்கூடும், ஏனென்றால் ஒவ்வொருவரின் சருமமும் வித்தியாசமானது, அதில் மக்கள் தங்கள் சருமத்திற்கு ஏற்ப தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க | இந்த உணவுகளை சாப்பிட்டால் ஒல்லியாகலாம்: எடை குறைப்பு டிப்ஸ்
இந்த 2 தவறுகள் முகத்திற்கு அதிக கெடுதலை ஏற்படுத்தலாம்
சரும பராமரிப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, வறண்ட சருமம் உள்ளவர்கள் எண்ணெய் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும், அதே நேரத்தில் எண்ணெய் பசை உள்ளவர்கள் தண்ணீர் அல்லது பவுடர் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டும், அத்தகைய சூழ்நிலையில், தவறான பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் மிகவும் பாதிக்கப்படுகிறோம். உங்கள் சருமத்தை சரியான முறையில் பராமரிக்கும் சில குறிப்புகளை இன்று நாம் காண உள்ளோம்.
1. அடிக்கடி முகம் கழுவுவதை தவிர்க்கவும்
முகம் பளபளக்க, சிலர் ஒரு நாளைக்கு பல முறை முகத்தை கழுவுகிறார்கள், அதனால் அவர்களின் முகம் பளபளப்பாக இருக்கும், ஆனால் அவ்வாறு செய்வது தீங்கு விளைவிக்கும் என்று உங்களுக்கு தெரியாது. அதன்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தைக் கழுவினால் போதும் என்கிறார்கள் நிபுணர்கள். முகத்தை அடிக்கடி கழுவுவதன் மூலம், முகத்தில் இருக்கும் இயற்கையான பளபளப்பு மறையத் தொடங்குகிறது, அத்துடன் முகம் மிகவும் வறண்டு போகும். தகவலுக்கு, முகத்தைக் கழுவிய பின் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம், இதனால் உங்கள் சருமம் மென்மையாக இருக்கும்.
2. வீட்டு வைத்தியம் பயன்படுத்துவதற்கு முன் இதை கவனிக்கவும்
சில சமயங்களில் முகத்தில் கரும் புள்ளிகள், முகப்பரு போன்ற பருக்கள் ஏற்படுவதால், வீட்டு வைத்தியத்தை மக்கள் பின்பற்றுகிறார்கள், இதுபோன்ற சூழ்நிலையில் எந்த ஒரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்பு அது உங்கள் சருமத்திற்கு பொருந்துகிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இல்லையெனில் அது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். ஒருவரது சருமம் வறண்டு இருந்து முல்தானி மிட்டியைப் பூசினால், அவர்களின் சருமம் வறண்டு போகும் எனவே வீட்டு வைத்தியம் உபயோகம் செய்வதற்கு முன்பு கணவனமாக தெரிந்து எடுக்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR