Flaxseed: அளவிற்கு அதிகமான ஆளி விதை பேராபத்து! எச்சரிக்கும் நிபுணர்கள்

இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸுடன் பேசுகையில், அதிக அளவில் ஆளி விதைகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த தகவல்களை அவர்  வழங்கினார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 5, 2022, 10:18 AM IST
  • பெரும்பாலானோர் பிட்னஸிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
  • உடலுக்கு ஆரோக்கியமானவற்றை தேடித் தேடி உண்கின்றனர்.
  • ஆரோக்கியம் குறித்து மிகுந்த விழிப்புணர்வோடு உள்ளனர்.
Flaxseed: அளவிற்கு அதிகமான ஆளி விதை பேராபத்து! எச்சரிக்கும் நிபுணர்கள் title=

ஆளிவிதையின் பக்கவிளைவுகள்:   இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானோர் பிட்னஸிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உடலுக்கு ஆரோக்கியமானவற்றை தேடித் தேடி உண்கின்றனர். ஆரோக்கியம் குறித்து மிகுந்த விழிப்புணர்வோடு உள்ளனர். இதற்காக  பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒரு பொருள் ஆளிவிதை. ஆளி விதைகளில் பைட்டோ கெமிக்கல்கள், லிக்னான்கள் மற்றும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை நம் உடலுக்கு அளப்பறிய நன்மை பயக்கும்.  மேலும், அளவில் இந்த சிறிய விதைகளில் நிறைய நார்ச்சத்து உள்ளது.  இதன் காரணமாக செரிமானம் சிறப்பாக இருக்கும் என்பதோடு, அதிகரித்து வரும் எடையைக் குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்தனை நன்மைகள் இருந்தபோதிலும், ஆளி விதையை அதிகமாக உட்கொள்வது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது குறித்து, இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸுடன் பேசுகையில் அவர் அதிக அளவில் ஆளி விதைகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பேசினார்.

ஆளி விதைகளை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:

1. வயிறு தொடர்பான பிரச்சனைகள்

ஆளி விதைகளை அதிகமாக உட்கொண்டால், வயிற்றுப்போக்கு மற்றும்  குடல் தொடர்பான பிரச்சனையை சந்திக்க நேரிடும். குடலில் பிரச்சனை உள்ளவர்களும் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எவ்வளவு ஆளி விதைகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து உங்கள் உணவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெறலாம்.

மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!

2. மலச்சிக்கல் 

ஆளிவிதையை அதிகமாக சாப்பிட்ட நிலையில்,  தண்ணீர்  அதிகம் உட்கொள்ளாமல் இருந்தால், உங்கள் குடலில் அடைப்பு ஏற்படலாம். எனவே, ஆளி விதை ஆரோக்கியத்திற்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், அதை சரியான அளவில், சரியான முறையில் பயன்படுத்துவது அவசியம்.

3. அலர்ஜி பிரச்சனைகள்

ஆளி விதைகளை அதிகம் உட்கொள்பவர்கள் அலர்ஜி பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மூச்சு விடுவதில் சிரமும் ஏற்படலாம். எனவே, உங்கள் உடலுக்கு ஏற்ற சரியான,  தேவையான அதே அளவு ஆளி விதைகளை சாப்பிடுங்கள். அதற்கு மருத்துவரை அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனையை பெறுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News