தினமும் ஒரு செவ்வாழை உண்பதால் கிடைக்கும் பலன்கள்

சொறி, சிரங்கு, தொலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும். செவ்வாழையில் அதிகமான சத்துக்கள் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 15, 2021, 12:34 PM IST
தினமும் ஒரு செவ்வாழை உண்பதால் கிடைக்கும் பலன்கள் title=

செவ்வாழை தொடர்ந்து சாப்பிடுவது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வாழைப்பழத்தை தொடர்ந்து உட்கொள்வது ஆற்றலை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.

இந்தியாவைப் பற்றி பேசினால், உலகிலேயே அதிக வாழைப்பழம் (Banana) உற்பத்தி செய்யும் நாடு. இங்கு சுமார் 4.5 லட்சம் ஹெக்டேரில் வாழை விவசாயம் செய்யப்படுகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு 180 லட்சம் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகில் காணப்படும் 300 வகையான வாழைப்பழங்களில் சுமார் 30-40 வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன.

ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!

செவ்வாழை நன்மைகள்

  • செவ்வாழை பழம் உயிர்ச்சத்து, சுண்ணாம்புசத்து மற்றும் இரும்புச்சத்துகள் நிறைந்த எண்ணற்ற பல மருத்துவ குணங்களை கொண்டது. 
  • செவ்வாழையில் பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. 
  • மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவிற்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.
  • தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, தொலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும். 
  • நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். 48 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும்.
  • தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு உண்டு. வாரம் 1 முறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும்.
  • தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர்  கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News