Best Breakfast Food: இன்றைய நவீன காலகட்டத்தில் உணவுப் பழக்கவழக்கம் என்பது மிகவும் மாறிவிட்டது. ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வது என்பது மிகவும் குறைந்துவிட்டது. முதலில் 4 வேளை உணவை சத்தாக சாப்பிட வேண்டும் என்பதே பலரின் குறிக்கோளாக இருந்தாலும் வாழ்க்கை முறை மாற்றம் இவற்றை அப்படியே மாற்றிவிட்டது.
உதாரணத்திற்கு காலை உணவை 11 மணிக்கும், இரவு உணவை நள்ளிரவு 1 மணிக்கும் சாப்பிடும் பழக்கம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் அதிகாலை 4 மணிக்கு பிரியாணி போன்ற உணவுகளை சாப்பிடுவதை ஒரு பழக்கமாகவும் சிலர் வைத்திருக்கின்றனர். இவை ஆரோக்கியமற்ற செயல்பாடுகள் என்றாலும் இவற்றில் ஈடுபடுவது பெரும்பாலும் இளைஞர்கள்தான். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவது சரியல்ல.
காலை உணவு முக்கியம் அமைச்சரே...
அதேபோல், காலை உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பதை ஒரு ஃபேஷனாக வைத்துள்ளனர். குறிப்பாக, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், பணிக்குச் செல்லும் இளைஞர்கள் உள்ளிட்டோர்... ஆனால் காலை உணவை தவிர்ப்பது என்பது உங்கள் உடலுக்கு நீங்களே செய்துகொள்ளும் பெரிய துரோகமாகும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! மூளை - கல்லீரலை காலி செய்யும் சோடா பானங்கள்..!!
காலை உணவுதான் மிகவும் முக்கியமான உணவாகும். காலையில் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் உங்களின் ஆற்றல் உயர்ந்து இருக்கும். மேலும் வளர்சிதை மாற்றமும் நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கும் என கூறப்படுகிறது.
நீரிழிவு நோயை தடுக்கும்
அந்த வகையில் காலையில் எந்த உணவை சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம். இந்த உணவு வாரத்திற்கு 3 நாள்கள் வரை சாப்பிடலாம். அது வேறு ஏதுமில்லை. காய்கறிகளும், சாலடும்தான். சாலட் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியமானது என்றாலும் அதனை காலை உணவாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இதில் தெரிந்துகொள்ளலாம். zeenews.india.com/tamil/health/vegetables-like-beans-cucumber-bottle-gourd-tomato-spinach-will-help-you-to-control-blood-sugar-in-summer-diabetes-tips-in-tamil-501465
சாலடுகள் மற்றும் காய்கறிகளில் அதிக நார்ச்சத்து இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் இருக்கு வழிவகுக்கும். நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை மெதுவாக உறிஞ்சும். எனவே, இது ரத்த சர்க்கரை அளவின் திடீர் அதிகரிப்பு என்ற ரிஸ்கை குறைக்கிறது.
இதய ஆரோக்கியம்...
நீரிழிவு நோய் உங்களை அண்டக்கூடாது என்றால் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். சாலடுகள் மற்றும் காய்கறிகள் குறைந்த கலோரிகளும், நார்ச்சத்தும் கொண்டிருப்பதால் வயிறு நிறைந்துவிட்ட உணர்வை தரும். இதன்மூலம் உடல் எடை குறையும்.
சாலடுகள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் இருக்கிறது. அவை உடலுக்கு மிகவும் நல்லது. சாலட் மற்றும் காய்கறிகளில் குறைந்த கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | பல நோய்களுக்கு மருந்தாகும் அரிசி கஞ்சி... அலட்சியமா நினைக்காதீங்க...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ