கொரோனா வைரஸை நினைத்து பயந்து பதைபதைத்த பலருக்கு, தற்போது கோபம் தலைக்கு ஏறியுள்ளது. பின்னே இருக்காதா? மொத்த வாழ்க்கையையும் புரட்டிப்போட்டு, எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விட்டதே… இதனால்தான் கவலை கோபமாக மாறியுள்ளது.
ஆனால், கோபத்துக்கெல்லாம் இந்த வைரஸ் அடங்காது… கொதிக்கிற தண்ணி போதும் என அசால்டாக வழி சொல்லியிருக்கிறார்கள் ரஷ்ய விஞ்ஞானிகள்.
ALSO READ | கொரோனா பயத்துல குழம்பாதீங்க… தேவையில்லாம யோசிச்சு பதறாதீங்க..!!!
கொரோனா வைரஸை போக்க எப்படி தீர்வு காண்பது என்பதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. புதையல் தேடிய கதையாக ஆளாளுக்கு தலையை பிய்த்துக்கொண்டு ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யாதான் ‘தடுப்பு மருந்தை நாங்க கண்டுபிடிச்சுட்டோம்’ என முதல் ஆளாக அறிவித்தது. அக்டோபரில் வந்து விடும் என உறுதி செய்திருக்கிறது.
அதுவரை வெந்நீரை காலில் கொட்டிய மாதிரி பதற்றத்துடன் இருப்பவர்களுக்கு, இன்னொரு புது தகவலையும் சொல்லியிருக்கிறார்கள் ரஷ்ய விஞ்ஞானிகள். வெந்நீரில் கொரோனா செத்துவிடும் என்பதுதான் அந்த தகவல்.
அதாவது, அறை வெப்பநிலையிலேயே கொரோனா 90 சதவீதம் செத்து விடுமாம். 72 மணி நேரத்தில் 99.9 சதவீதமும் இறந்து விடும். கொரோனாவின் வாழ்நாள் காலம் இவ்வளவுதான்.
அதுவரை நம்மள சாகடிக்குதே என கலங்காதீங்க… கொதிக்கும் நீரில் உடனடியாக செத்துவிடுமாம். அதுக்காக மூட்டைப்பூச்சியை பிடிச்சு தண்ணீரில் போடுற மாதிரி வெந்நீரும் கையுமா அலையாதீங்க… கொரோனாவெல்லாம் கண்ணுக்கு தெரியாது. தொண்டையிலதானே கொரோனா வைரஸ் நிக்குது. அது நுரையீரலுக்குள்ள நுழையிறதுக்குள்ள அழிச்சுடலாம்னு கொதிக்கிற வெந்நீரை வாயில ஊத்திடாதீங்க… வெந்து போயிடும்.
ALSO READ | Work From Home: அதிர்ச்சிகரமான உடல் மற்றும் மன நல பாதிப்புகள் என்ன...!!!
அப்பப்ப பொறுக்குற சூடுல வெந்நீரை குடிங்க, கபசுர குடிநீர் குடிங்கன்னு நமக்கு எப்பவோ அட்வைஸ் பண்ணிட்டாங்க. அதெல்லாம் கரீட்டா ஃபாலோ பண்ணுங்க… சுத்தமா இருந்தா போதும்… கொரோனா மொத்தமா ஓடிப்போயிடும்.