மாங்காய்க்கு மாற்றா? வாழைக்கும் டஃப் ஃபைட் கொடுக்கும் அசைவப் பழம் அத்தி

Anjeer Benefits: காயாகவும் பழமாகவும் எந்த ரூபத்திலும் பயன்படுத்தக்கூடிய ஒருசில உணவுப் பொருட்களில் அத்தியும் ஒன்று... அத்திக்காய் மற்றும் அத்திப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 17, 2023, 06:28 AM IST
  • காயா? பழமா? இரண்டுமே!
  • எந்த ரூபத்திலும் பயன்படுத்தக்கூடிய உணவு
  • அத்திக்காய் மற்றும் அத்திப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
மாங்காய்க்கு மாற்றா? வாழைக்கும் டஃப் ஃபைட் கொடுக்கும் அசைவப் பழம் அத்தி title=

மாறிவரும் பருவத்தில், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி உணவை சமச்சீராக எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். நம்மை நோய்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் பழம் அத்திப் பழம் அந்த ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று அத்திக்காய் மற்றும் அத்திப்பழம். வாழை மற்றும் ’மா’வைப் போன்றே, அத்தியின் காயும், பழமும் உண்ண ஏற்றவை.  வாழைக்காய் - வாழைப்பழம், மாங்காய் - மாம்பழம் வகையில், அத்திக்காய் - அத்திப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை.

அத்தியின் அருமை பெருமையை சொல்வதென்றால் அது வார்த்தைகளுக்கும் அடங்கிவிடாது, தொடர்ந்து பயன்படுத்திவந்தால் மட்டுமே முழுமையாக புரிந்துக் கொள்ளலாம் என்று சொல்லலாம். ஆனால், அத்திக்காய் மற்றும் அத்திப்பழத்தின் ஆரோக்கியப் பண்புகளை தெரிந்துக் கொண்டு உண்டால், ஆரோக்கியம் என்றும் நம் கையில் இருக்கும். 
 
அத்திக்காய் பலன்கள்

துவர்ப்பு சுவையுடைய காய்களில் ஒன்றான அத்திக்காய், பொரியலாகவும், குழம்பாகவும் செய்து சாப்பிட ஏற்றது. அத்திக்காயில் வைட்டமின் ஓ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. பொதுவாக விட்டமின் ‘ஓ’ உள்ள காய்களில் அத்திக்கு முதலிடம் என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க | இந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா? இது ஆரோக்கிய கார்னர்

அத்திக்காய், நீரிழிவு நோயாளிக்கு அருமருந்து என்றே சொல்லலாம். துவர்ப்புச் சுவையுள்ள காயான அத்தியை சமைத்து சாப்பிடுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

அத்திக்காய் மருத்துவ பண்புகள்

அத்திக்காயைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதலை நிறுத்தும். அத்திக்காய் குளிர்ச்சியானது என்பதால், ரத்த மூலத்தை குணப்படுத்தும் வல்லமை உடையது,  வாயுவைப் போக்கக்கூடிய தன்மை கொண்டது.

உடலிலுள்ள ரணங்களை ஆற்றக் கூடிய அத்திக்காயின் மருத்துவ குணங்கள், வெட்டை நோயை குணப்படுத்தும் குணாதிசயத்தையும் பெற்றது.. வயிற்று புண்னுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது அத்திக்காய்.

ஆரோக்கியத்தில் அத்திப்பழங்கள்

அத்திப்பழத்தை பழமாக சாப்பிடுவது என்பது, அதை உலர வைத்து உண்பதை குறிக்கும். நாள்பட்ட நோய்களை எதிர்த்துப் போராட உதவும் அத்திப்பழத்தில், அது காயாக இருக்கும்போது இருந்த சத்துக்கள் பன்மடங்காக அதிகரிக்கின்றனர். அத்திப்பழஹ்ட்தில், பொட்டாசியம், தாதுக்கள், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

மேலும் படிக்க | அனுஷ்காவின் பளபள தேகத்திற்கு இதுதான் காரணமா..? வெளியானது ஸ்கின் கேர் சீக்ரட்! 

அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

எலும்புகளின் வலிமையை அதிகரித்து, அவற்றை வலுப்படுத்துகிறதும் தன்மையைக் கொண்ட அத்திப்பழத்தை, அளவுக்கு அதிகமாகவும் உண்ணக்கூடாது. வயதுக்கு ஏற்ப, அதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

fruit

அத்திப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தி

இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் துத்தநாகம் என ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாக திகழும் அத்திப்பழம், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை பெருக்குவதுடன், உடலின் உள்ளுறுப்புகளை வலிமைப்படுத்துகிறது.

மலச்சிக்கலுக்கு அத்திப்பழம்

நார்ச்சத்து அதிகமாக கொண்ட அத்திப்பழம், மலச்சிக்கலுக்கு அருமையான மருந்தாக செயல்படுகிறது.

செரிமானம், எடை குறைப்புக்கு அத்திப்பழம்

அத்திப்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிடுவது அதிக பலன் தரும். அத்திப்பழம் செரிமானத்திற்கும் ஏற்றது. தொடர்ந்து அத்திப்பழத்தை உண்டு வந்தால், அது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது.

ரத்த அழுத்தத்திற்கு அத்திப்பழம்

வயிற்று வலி, வாயு மற்றும் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக அத்திப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

நீரிழிவுக்கு அத்திப்பழம்

இதய நோயாளிகள் அத்திப்பழம் சாப்பிடுவதை சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் அத்திப்பழத்திற்கு ஈடு இல்லை! இது சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைப்பதோடு, டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சஞ்சீவியாக செயல்படுகிறது.

(பொறுப்புத்துறப்பு: பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்தில் இருக்கும் தகவல்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | கம்முன்னு கம்பு சாப்பிட்டா, டாக்டர்கிட்டயே போக வேண்டாம்! கம்பு: அ முதல் .'. வரை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News