Neeri-KFT சிறுநீரக நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகுமா; மருத்துவர் கூறுவது என்ன..!!

சிறுநீரக நோயாளியை மூலிகைகளால் குணப்படுத்தலாம் என்று வெளியாகியுள்ள தகவல், சிறு நீராக நோயினால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு நற் செய்தியாக இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 10, 2022, 11:19 AM IST
  • சிறுநீரக சிகிச்சையில் நீர்-கேஎப்டி.
  • சிகிச்சையில் பயன்படுத்தும் மூலிகைகள்.
  • BHU ஆயுர்வேத துறையின் தலைமை பேராசிரியர் கே.என். திவேதி அளித்த தகவல்
Neeri-KFT சிறுநீரக நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகுமா; மருத்துவர் கூறுவது என்ன..!! title=

இன்று உலக சிறுநீரக தினம். இந்நிலையில், தீவிர சிறுநீரக நோயாளிகளுக்கு ‘புனர்னவா’, ‘கோக்ரு’ மற்றும் ‘வருணா’ போன்ற மூலிகைகள் உயிர் காக்கும் மருத்துகளாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) ஆயுர்வேத துறையின் தலைமை பேராசிரியர் கே.என். திவேதி, இந்த மூலிகைகள் செயலிழந்த சிறுநீரகங்களின் செல்களை புத்துயிர் பெறச் செய்யும் என்று கூறினார்.

நீரி-கேஎஃப்டி (Neeri-KFT) என்பது ஆயுர்வேத மருந்து ஆகும். இது புனர்நவா, அஸ்வகந்தா மற்றும் குடுச்சி போன்ற  மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது என பேராசிரியர் கூறினார்.

மூலிகைகளின் நன்மைகள்

பேராசிரியர் துவிவேதி கூறுகையில், 'வருணா' மூலிகை ரத்தத்தை சுத்திகரிக்கும் நல்ல மருந்து, 'கோக்ரூ' சிறுநீரக நெஃப்ரான்கள் புத்தியிர் பெற உதவுகிறது. இதுபோன்ற மூலிகைகளால் பல நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர் என்றார். எமில் பார்மாசூட்டிகல் நிறுவனம் விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு நீரி-கேஎஃப்டி மருந்தை உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்க | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!

சிறுநீரக நோயாளிகளிடம் காணப்படும் அறிகுறிகள் 

சிறுநீரகம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று. சிறுநீரக ஆரோக்கியம் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒருவரது உடலில் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படும் போது அதற்கு பல அறிகுறிகள் தென்படும். இதில், தோலின் நிறம் வெளுத்து போகுதல், நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தல் ஆகியவை அடங்கும். இது தவிர, நகங்கள் பலவீனமாகவும் பச்சையாகவும் மாறத் தொடங்குகின்றன.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் வேறு வித  சிகிச்சைக்கான மாற்றாக இருக்க முடியாது. இதனை பின்பற்றும் முன், மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.)

மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News