கோடை வெயிலின் தாக்கத்தால் நாம் சாப்பிடும் உணவுகள் நமது உடலில் வெவ்வேறு வகையான மாற்றங்களை உருவாக்கலாம். அப்படி வெயில் காலத்தில் உடலுக்கு உபாதை தரும் உணவுகளை சாப்பிடுகையில் அதிக கவனம் அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலர் பழங்கள்:
டயட்டில் இருப்போர், ஹெல்தியான வாழ்க்கையை கடைப்பிடிப்போர் தினமும் காலையில் உலர் பழங்கள் (ட்ரை ஃப்ரூட்ஸ்) சாப்பிடுவது வழக்கம். கோடையில் இவற்றை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த உலர் பழங்கள் உடலில் அசெளகரியத்தை உண்டாக்கி உடல் வெப்பத்தை மேலும் அதிகப்படுத்துமாம்.
ரசாயன பானங்கள்:
கண்ணாடி அல்லது ப்ளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள குளிர் பானங்களில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்டுகள் கலந்திருக்குமாம். இவற்றை வெயிலின் போது பலர் தாகம் தாளாமல் குடிக்கின்றனர். இதில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாகவும் உடலின் நீர் சக்தியை இது குறைத்து விடுவதாகவும் சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | மகிழ்ச்சியாக வாழ இந்த 6 வழிமுறைகளை உங்கள் வாழ்வில் கொண்டு வாருங்கள்
காஃபி:
வெயிலின் வெப்பத்தால் நமது உடலில் ஏற்கனவே அதிகளவில் வெப்பம் உண்டாகியிருக்குமாம். இந்த நிலையில், ஒருவர் காஃபி அருந்தினால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைய வாய்ப்பு இருக்கிறதாம். ஒரு நாளைக்கு ஒரு கப் காஃபி குடிப்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கோடையில் அதிகமாக காஃபி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
காரமான உணவுகள்:
சாதாரண நாட்களிலேயே அதிக காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். கோடை காலங்களில் காரமாண உணவு வகைகளை தொடவே கூடாது என சில நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி காரமான உணவுகளை சாப்பிட்டால் அது உடலில் உள்ள நீர்சக்தியை உருஞ்சி, அஜீரண கோளாருகளுக்கு வழி வகுக்குமாம். இதற்கு மேல், உடலின் வெப்பத்தையும் அதிகரிக்குமாம்.
ஊறுகாய்:
உப்பு, எண்ணெய் போன்றவற்றில் ஊறவைத்து தயாரிக்கப்படுபவைதான் ஊறுகாய். அதிலும் மாங்காய், பூண்டு, எலுமிச்சை என பல விதங்களில் இவை தயாரிக்கப்படுகின்றன. இவற்றை சாப்பிடுவதாலும் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைய வாய்ப்பு உள்ளதாம். கோடை வெயிலில் நிறைய ஊறுகாய் சாப்பிடுவது அஜீரண கோளாறு ஏற்படவும் வழிவகுக்குமாம்.
பொறித்த உணவுகள்:
எண்ணெயில் பொறித்தெடுத்த உணவுகள் அனைத்தும் நமது நீர் சக்தியை உடலில் இருந்து நீக்கும் தன்மை உடையவை. பர்கர், சமோசா, சிப்ஸ் வகைகள் போன்ற உணவுகளை கண்டிப்பாக கோடை வெயிலின் போது அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மது அருந்துதல்:
கோடை காலத்தில் மது அருந்துவதால், வாய் உலர்ந்து போகுமாம். இது, உடலில் உள்ள நீர்சத்து குறைவால் ஏற்படுகின்றது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தலைவலி, அஜீரண கோளாறு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மது அருந்துவதை கோடையில் அறவே தவிற்பது நல்லது.
மேலும் படிக்க | இரவில் தயிர் சாப்பிடலாமா? வேண்டாமா? மருத்துவ நிபுணர்கள் கூறுவது இதுதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ