எலுமிச்சை ஊறுகாயில் இத்தனை நன்மைகளா? பெண்களே நீங்கள் தவிர்க்கக்கூடாத ஊறுகாய் இது

Lemon Pickle Benefits: ஆரோக்கியத்திற்கு உகந்த எலுமிச்சையை கனியாக உண்பது உடல்நலத்திற்கு ஆரோக்கியம் என்றால், அதை ஊறுகாயாக சாப்பிட்டால் கிடைக்குக்ம் நன்மைகள் அதிசயப்பட வைக்கின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 18, 2022, 07:45 PM IST
  • ஊறுகாய்க்குள் இத்தனை ஆரோக்கியமா?
  • உணவே மருந்து என்பதை உறுதியாக்கும் எலுமிச்சை ஊறுகாய்
  • எலுமிச்சை கனி சிறந்ததா இல்லை ஊறுகாயா?
எலுமிச்சை ஊறுகாயில் இத்தனை நன்மைகளா? பெண்களே நீங்கள் தவிர்க்கக்கூடாத ஊறுகாய் இது title=

எலுமிச்சை அதிசயக்கனி, ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று சொல்லப்படுகிறது. எலுமிச்சையை கனி என்றும் சொல்லலாம் காய் என்றும் சொல்லலாம். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் இந்த எளிய ஆனால் சக்தி வாய்ந்த காயின் பலன்கள் மற்றும் மருத்துவ பயன்களால் இது இராசக்கனி என்று அழைக்கப்படுகிறது. பித்தத்தை உடனடியாக குறைக்கும் அபூர்வமான சக்தியைக் கொண்டிருக்கும் எலுமிச்சம்பழம் மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகுக்கும், புத்துணர்ச்சித் தருவதற்கும் எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சையை காயாகவும் பயன்படுத்தலாம், அதன் சாற்றை பானமாகவும் பயன்படுத்தலாம். ஆனால், எலுமிச்சையை ஊறுகாயாக செய்து நீண்ட நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

இது உணவுப்பொருளான எலுமிச்சையை கெட்டுப்போகாமல் காப்பதற்கான வழி என்று குறுகிய வட்டத்தில் அடைத்துவிட முடியாது. பல பயன்களை அளிக்கும் எலுமிச்சை ஊறுகாய், செய்வதற்கும் எளிமையானது. ஆனால், அதன் ஆரோக்கிய நன்மைகள் பட்டியலுக்குள் அடங்காதது.

மேலும் படிக்க | காலை உணவை இப்படி சாப்பிட்டால் நீரிழிவு கட்டுக்குள் வரும்

எலுமிச்சை ஊறுகாய் என்ற சுலபமான வார்த்தைக்கு பின் பொதிந்துள்ள ஏராளமான நன்மைகள் என்ன? எலுமிச்சை ஊறுகாயின் நன்மைகளை சுருக்கமாக தெரிந்து கொள்வோம். எலுமிச்சை ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கும் என்றால், அதன் ஆரோக்கிய நன்மைகள் மனதுக்கு சுகம் தரும்.

சுவையில்லாத உணவாக இருந்தாலும், அதனுடன் எலுமிச்சை ஊறுகாயை சேர்த்து உண்டால் உணவு வயிற்றுக்குள் இறங்கிவிடும் என்பதோடு, இந்த ஊறுகாய் உணவின் சுவையை இரட்டிப்பாக்குகிறது. எலுமிச்சை ஊறுகாயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்க உதவுகிறது.

மேலும் படிக்க | வைட்டமின் பி12 குறைபாடு இருக்கா? சைவ உணவுக்காரர்களுக்கான அற்புதமான வழி

எலுமிச்சை ஊறுகாய் - எலுமிச்சை ஊறுகாய் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இதன் உட்கொள்ளல் இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது. உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு எதிராக அவர்கள் செயல்படுகிறார்கள்.

இதயத்திற்கு நன்மை பயக்கும் எலுமிச்சம் பழ ஊறுகாயை சேர்த்துக் கொள்ளும் பெண்களுக்கு ஷெமிக் ஸ்ட்ரோக் எனப்படும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் சி சத்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை தடுத்து, ஷெமிக் வாத நோய் ஏற்படாமல் இருக்கும். 

மேலும் படிக்க | நெல்லிக்காயை இப்படி பயன்படுத்தினால் எடை குறையும்... 

எலுமிச்சை ஊறுகாயில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. வயது அதிகரிக்கும் போது, ​​எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. எனவே, தொடர்ந்து எலுமிச்சை ஊறுகாயை உட்கொள்ளலாம். இதில் வைட்டமின் சி, ஏ, கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது உங்கள் எலும்புகளை வலுவாக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எலுமிச்சை ஊறுகாய் பயன்படுகிறது. எலுமிச்சை ஊறுகாயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. எலுமிச்சையின் ஊறுகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

எலுமிச்சை ஊறுகாயை உட்கொள்வது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதயம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க எலுமிச்சை ஊறுகாய் உதவுகிறது.

மேலும் படிக்க | நீங்க எவ்வளவு உணவை வீணடிக்கிறீங்க தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் தரவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News