சில பெண்கள் கருத்தரிக்க சிரமப்படுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இந்த நாட்களில், மோசமான, பிஸியான மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை, மோசமான உணவுப்பழக்கம் காரணமாக குழந்தையின்மை பிரச்சனை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கருவுறாமை பிரச்சனை பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் என்று ஒரு பொதுவான நம்பிக்கை உள்ளது. ஆனால் அது அவ்வாறு இல்லை. தற்போது ஆண்களும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.
குழந்தையின்மை என்பது எந்தவொரு தம்பதியினருக்கும் மிகவும் வெறுப்பாக இருக்கும். இது அவர்களது மகிழ்ச்சியான மண வாழ்க்கையையும் பாதிக்கும். அவர்களுக்கு இடையே சண்டைகள் ஏற்படலாம். விவாகரத்துகூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இங்கு பொறுமையும், புரிதலும் அவசியம். ஆண் பெண் இருவரும் தங்களின் பிரச்சனையை சரியாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப தீர்வு காண முயற்சித்தால் குழந்தையின்மை பிரச்சனைக்கு குறிப்பிட்ட காலத்தில் தீர்வு கிடைக்கும்.
மேலும் படிக்க | விந்தணு குறையாமல் இருக்க இந்த உணவுகளை தவிர்க்கவும்
குழந்தையின்மை என்றால் அதற்கு பெண்கள் மட்டுமே காரணம் என்ற மனப்போக்கு இங்கு உள்ளது. ஆனால், அதற்கு இருவரும் காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை பெண்களிடம் பிரச்சனை இல்லாமல் ஆண்களிடம் பிரச்சனை இருந்தால் அது ஆண்மைக்குறைவுடன் தொடர்புடையது. ஒரு மனிதன் கருவுறாமை பிரச்சினையால் அவதிப்பட்டாலோ அல்லது பாலியல் செயல்பாடுகளின் போது அவனது செயல்திறன் மோசமாக இருந்தாலோ, இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.இத்தகைய கடினமான காலங்களில், மனைவி அவர்களை ஆதரவாக வேண்டும். மனைவி கொடுக்கும் ஆதரவு மூலம் பிரச்சனையில் இருக்கும் ஆண்கள் விரைவாக குணமடைய வாய்ப்புகள் உள்ளன.
ஆரோக்கியமான சூழல்
பாதிப்பில் இருக்கும் ஆண்களுக்கு ஆரோக்கியமான வீட்டுச் சூழல் இருப்பது அவசியம். மன அழுத்தம் மற்றும் சோர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்கள் வீட்டில் அமைதியான சூழலை எதிர்பார்க்கிறார்கள். அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆண்களுக்கு தொழில் ரீதியாக பிரச்சனை இருக்கலாம். இது அவர்களை வெகுவாக பாதித்திருக்கும்பட்சத்தில் இருவரும் கலந்துரையாடுங்கள். உங்களின் அன்பு கணவரை பாதிப்பில் இருந்து நிச்சயம் மீட்கும்.
வெளிப்படையான விவாதம்
குழந்தையின்மைக்கான காரணங்கள் தெரியவரும்போது, இருவரும் வெளிப்படையாக பேசுங்கள். இருவருக்கும் இடையில் கூச்சம் இருக்கக்கூடாது. என்ன பேச வேண்டும் என்பதை பேசி, நேர்மறையாக என்ன செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள். ஒருவரையொருவர் குறைசொல்வதில் எந்த பயனும் இல்லை. குறிப்பாக, பிரச்சனை ஆண்களிடம் இருக்கும்போது அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டாமல் மீள்வதற்கான வழிகளைப் பற்றி பேசி, நம்பிக்கையூட்டுங்கள்.
கெட்ட பழக்கங்கள்
ஒருவேளை உங்கள் பார்ட்னருக்கு கெட்ட பழக்கங்கள் இருந்தால், அதுவும் குழந்தையின்மை சிகிச்சைக்கு இடையூறாக இருப்பவற்றை உடனடியாக நிறுத்துமாறு ஆலோசனை கூற வேண்டும். கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபடுவதற்காக உதவி செய்யுங்கள். படிப்படியாக மட்டுமே கெட்டபழக்கங்களில் இருந்து விடுபட முடியும் என்பதை நீங்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | Male Fertility: இந்த பச்சைக் காய்கறி ஆண்களின் இந்த பலவீனத்தை நீக்க உதவும்
உடற்பயிற்சி
நாள்தோறும் உடற்பயிற்சி செய்ய உங்கள் கணவரை ஊக்குவியுங்கள். உடற்பயிற்சி உங்கள் கணவரின் ஹார்மோன் அளவை சீராக பரமாரிக்க உதவுகிறது. காலை நடைப்பயிற்சி அல்லது ஜாகிங், நடைப்பயிற்சி போன்ற சில எளிய பயிற்சிகளைச் செய்யச் சொல்லுங்கள். ஜிம்மில் யோகா மற்றும் பிற உடல் செயல்பாடுகளைச் செய்ய நீங்கள் அவர்களை ஊக்குவிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR