வீட்டில் தயாரிக்கப்படும் ஹேர் டை: முடி நரைப்பது என்பது தற்போதைய காலக்கட்டத்தில் சகஜமாகிவிட்டது. நமது மோசமான வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணம். இதனுடன், மாசு, மோசமான உணவு மற்றும் முடியைப் பராமரிக்காதது போன்றவற்றும் முடி நரைப்பதற்கு முக்கிய காரணங்களாகும். முடி ஒரேடியாக நரைத்து விடாது. மாறாக நாள்பட தான் முடி நரைக்க ஆரம்பிக்கும். இதற்கிடையில் நீங்கள் சில நடவடிக்கைகளை எடுத்திருந்தால், ஒருவேளை உங்கள் தலைமுடியை வெள்ளையாக மாற்றாமல் காப்பாற்றிருக்கலாம். நரை முடிக்கான வீட்டு வைத்தியங்களும் உள்ளன, அவை சரியான நேரத்தில் பயன்படுத்தப்படால் சிறந்த பலன்களைத் தரும். இயற்கையான ஹேர் டை முடியை கருப்பாக வைத்திருக்கும். சில வீட்டில் தயார் செய்யப்படும் சாயங்கள் உங்கள் நரை முடியை மீண்டும் கருப்பாக்க உதவலாம். உங்கள் தலைமுடியை கருமையாக்க அல்லது நரைப்பதை மறைக்க உதவும் சில எளிய மற்றும் முற்றிலும் இயற்கையான விஷயங்களை தெரிந்துக்கொள்வோம்.
நரை முடியை கருமையாக்க ஹேர் டை | Natural hair dye to darken gray hair
வால்நட் ஓடுகள்
வால்நட் ஓடுகள் உங்கள் நரை முடிக்கு சிறந்த வழியாகும். சில வால்நட் ஓடுகளை எடுத்து, அவற்றை நசுக்கி தண்ணீரில் சுமார் 30 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். திரவம் தயாரானதும், நரை முடி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கூந்தல் கருப்பாகும்.
மேலும் படிக்க | உடல் கொழுப்பை எரிக்க.... சூப்பரான ‘5’ காலை உணவு ரெஸிபிக்கள்!
மருதாணி
மருதாணி பொடியை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து வைக்கவும். பிறகு மறுநாள் கலவையில் இதில் கொதிக்க வைத்த டீ அல்லது காபி தூள்களை சேர்க்கலாம். இந்த கலவையை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி, சில மணி நேரம் ஆபடியே விட்டு வைத்து பிறகு கழுவவும். இது வெள்ளை முடியில் இருந்து நிவாரணம் பெற உதவும்.
உருளைக்கிழங்கு தோல்கள்
வேகவைத்த உருளைக்கிழங்கு தோல்களைப் பிரித்து, அதில் வேகவைத்திருந்த அந்த தண்ணீரை மிஸ் செய்யவும். பிறகு ஷாம்பூவுடன் உங்கள் தலைமுடியைக் கழுவி, கண்டிஷனரைப் பயன்படுத்தவும். இப்போது அந்த உருளைக்கிழங்கு தோலின் திரவத்தை எடுத்து உங்கள் தலைமுடியில் தடவவும். நீங்கள் அதை கழுவ தேவையில்லை. உருளைக்கிழங்கு தோலில் இருந்து வெளியாகும் மாவுச்சத்து உங்கள் தலைமுடிக்கு நிறத்தை அளித்து நரை முடியைப் போக்குகிறது.
தேநீர்
பிளாக் டீயை புத்துணர்ச்சி பெற பயன்படுத்துகிறோம், ஆனால் அது நரை முடியை கருமையாக்கவும் உதவுகிறது. இதற்கு பிளாக் டீ இலைகளை முதலில் கொதிக்க வைத்து தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலையை அலசவும். இல்லையெனில் தேயிலை இலைகளை அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் தயார் செய்யலாம். இப்போது இந்த கலவையை தலைமுடியில் தடவி காயந்தப் பின் தண்ணீரில் நன்கு அலசவும். சில நாட்களில் வித்தியாசம் தெளிவாகத் தெரியும்.
கறிவேப்பிலை
உணவின் சுவையை அதிகரிக்க கறிவேப்பிலையை அடிக்கடி நாம் பயன்படுத்துகிறோம், ஆனால் இவை கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் இதற்கு நீங்கள் முதலில் மிக்ஸியில் கறிவேப்பிலை, நெல்லிக்காய் பொடி, நீர்ப்பிரமி தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட் தயாரானதும், தலைமுடியில் 30 நிமிடங்கள் தடவி உலர வைக்கவும். நன்கு காய்ந்தப் பிறகு இறுதியாக, முடியை சுத்தமான தண்ணீரால் கழுவவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் பருமனா? மோருடன் இதை கலந்து குடிங்க... ஓவர் வெயிட் பிரச்சனை 'நோ மோர்'
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ