கோடை காலம் ஆரம்பித்து விட்டது. பெரும்பாலானோருக்கு சிறுநிரக பிரச்சனை, தலைவலி, உடல் சோர்வு என்று பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். அதேபோல பலருக்கும் தசைப் பிடிப்பும் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நம்மில் பலருக்கும் இரவு தூங்கும்பொழுது, உடற்பயிற்சி செய்யும்போது, படிக்கட்டில் ஏறும்போது என பல நேரங்களில் தசை பிடிப்பு ஏற்படும்.
கெண்டை கால், தொடையின் கீழ் பகுதி உள்ளிட்ட இடங்களில் மின்னல் வெட்டுவதுபோல ஒரு வலி ஏற்பட்டு நரம்போடு சதையும் சுறுண்டுகொள்வதுபோல் தோன்றும். பெரும்பாலும் கர்ப்பிணி பெண்கள் இதுபோன்ற வலியால் அதிகம் அவஸ்தைப்படுவது உண்டு. இந்த தசை பிடிப்பு எதனால் ஏற்படுகிறது. இதற்கு என்ன தீர்வு என்பதை பார்க்கலாம்.
மருத்துவர்கள் அனைவருக்கும் பொதுவாகக்கூறும் ஒரே ஒரு அறிவுறை "தண்ணி நல்லா குடிங்க, தண்ணி குடிச்சாவேபோதும்" என்பதுதான். உடலில் இந்த தண்ணீர் பற்றாக்குறை காரணமாகத்தான் தசை பிடிப்பு ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
கர்ப்பிணி பெண்களுக்கு பொதுவாக ஊட்டச்சத்து பற்றாக்குறை இருக்கும் அதனுடன் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படும்போது அவர்களுக்கு தசை பிடிப்பு அதிகமாக காணப்படுகிறது. அதேபோல உடற்பயிற்சி செய்யும் பலரும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள தவறுகிறார்கள், தண்ணீரும் போதுமான அளவு குடிப்பது இல்லை. இதனால் அவர்களுக்கும் தசை பிடிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளன.
இதையெல்லாம் தாண்டி, கோடை காலத்தில்தான் இந்த தசை பிடிப்பு பலருக்கும் ஏற்படுகிறது. உடலில் ஏற்கனவே நீர் பற்றாக்குறை உள்ளவர்கள் மட்டும் இன்றி பொதுவாக அனைவருக்குமே இந்த தசை பிடிப்பு ஏற்படும். சாதாரண நாட்களை விட கோடை காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதே இதன் அறிகுறி.
மேலும் படிக்க | நீங்க அதிகமா பால் குடிப்பீங்களா, உங்களுக்கான எச்சரிக்கை செய்தி
தசை பிடித்தால் என்ன செய்யலாம்:-
இரவு நேரங்களில் தசை பிடிக்கும்போது, கால்களை மெதுவாக நீட்டி வைத்து தசை பிடித்த இடத்தை மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். கூடவே மிக முக்கியமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
தசை பிடித்து விடுபட்ட பிறகும் தசை பிடித்த இடத்தில் தொடரும் வலிக்கு, மணலை சூடாக்கி துணியில் கட்டி ஒத்தடம் வலிக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். வலிக்கும் இடத்தில் சூடானா நீரால் ஒத்தடம் கொடுக்கலாம். பெரு விரலை தரையில் ஊன்றி நின்று வலிபட்ட இடத்திற்கு எடையை கொடுக்கும்போது வலியில் இருந்து விடுபடலாம்.
இந்த தசை பிடித்தம் ஏற்படாமல் இருக்க உட்கொள்ள வேண்டியது:-
எலுமிச்சை சாறுடன் உப்பும் தண்ணீரும் கலந்து குடிப்பதன் மூலம் உடல் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மீட்டெடுக்கிறது. எலுமிச்சை சாறு விட்டமின் சியையும், கல் உப்பு பொட்டாசியம், சல்பர், மெக்னீசியம் மற்றும் சோடியம் போன்ற சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது.
இளநீர் குடிப்பது இரட்டிப்பு பலனை தரும் என்கிறார்கள் மருத்துவர்கள். இளநீரில் உள்ள பொட்டாசியம், எலக்ட்ரோலைட் குறைபாட்டை போக்கி தசை பிடிப்பை சரிசெய்ய உதவுகிறது. இதில் உள்ள எதிர்ப்பு சக்தி வைரஸ் நோய் தாக்குதலுக்கு நல்ல மருந்தாகவும் அமைகிறது. உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், குளிர்ச்சியை தந்து கோடைக்கு ஏற்ற சிறந்த பானமாக உள்ளது.
மேலும் படிக்க | பொடுகுத்தொல்லையா? முடி உதிரும் பிரச்சனையா? இதை செய்து பாருங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR