உங்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதா... அல்லது இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இல்லையா.. கவல் வேண்டாம் உங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் அமிர்தம் போல் வேலை செய்யும் இரு செடியை பற்றி அறிந்து கொள்ளலாம். சேதமடைந்த நுரையீரலும் இதனால் புத்துணர்ச்சி பெறும். அது மட்டுமல்ல நரம்புகளில் கொழுப்பு சேர்வதிலிருந்து, உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய்களில் இது மாமருந்தாக செயல்படுகிறது. அதாவது இதனை கொண்டு உங்கள் நோயை இயற்கையாகவே குணப்படுத்த முடியும்.
இதில் உள்ள மற்றொரு சிறப்பு என்னவென்றால், இந்த நாட்டு தாவரத்தை நீங்கள் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள சாலையில் அல்லது காடுகளில் புதர் வடிவத்தில் காணலாம். சர்க்கரை நோய் முதல் சிறுநீரகக் கற்கள் வரை பல கடுமையான நோய்களைக் குணப்படுத்தும் அற்புத ஆற்றல் இதற்கு உண்டு.
நீங்கள் இதுவரை துளசி அல்லது அஸ்வகந்தா போன்ற ஆயுர்வேத செடிகளை பயன்படுத்தியிருக்கலாம். அதை போலவே இந்த செடியின் மந்திர சக்தியையும் தெரிந்து கொள்ளுங்கள். மருத்துவ குணங்கள் கொண்ட தாவரமான, பார்லேரியா பிரியோனிடிஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இது, வஜ்ரதந்தி என்று அழைக்கப்படுகிறது. பல்வலி, இரத்த சோகை, பாம்பு கடி, சர்க்கரை நோய், நுரையீரல் நோய், ரத்தம் சம்பந்தமான நோய்களை இவை குணப்படுத்தும். வஜ்ரதந்தியின் பண்புகள், பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
வஜ்ரதந்தியின் மருத்துவ குணங்கள்
வஜ்ரதந்தி செடியின் பூக்கள், இலைகள், தண்டுகள் மற்றும் வேர்கள் ஆகியவை ஆயுர்வேதத்தில் பல்வேறு மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்த தாவரத்தில் ஃபிளாவனாய்டுகள், பினாலிக், இரிடோய்டல் மற்றும் ஃபைனிலெத்தனாய்டு கிளைகோசைட்ஸ் கலவைகள் காணப்படுகின்றன. மேலும் இது அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு, ஆன்டிஆக்ஸிடன்ட், பூஞ்சை காளான், ஹெபடோப்ரோடெக்டிவ், ஆன்டிபிளாஸ்மோடியல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஆகியவற்றின் புதையல் ஆகும்.
மேலும் படிக்க Health Tips: நுரையீரலில் சேரும் அழுக்கையும் நச்சுக்களையும் நீக்கும் வெல்லம்!
வஜ்ரதந்தி சில நோயகளுக்கு மா மருந்தாக செயல்படுகிறது
பல்வலி, இரத்த சோகை, பாம்பு கடி, நீரிழிவு நோய், நுரையீரல் நோய்கள், இரத்தக் கோளாறுகள், மலச்சிக்கல், மூட்டுவலி, சிறுநீரகக் கற்கள், மன அழுத்தம், முடி உதிர்தல் மற்றும் வீக்கம் போன்ற கொடிய பிரச்சனைகளை குணப்படுத்தும் திறன் கொண்டது. வீக்கம், காயங்கள், தீக்காயங்கள், ஈறு அழற்சி, இரவு விந்து வெளியேறுதல் மற்றும் நீரிழிவு நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இது இருமல், தோல் தொற்று, இரத்த சோகை மற்றும் காசநோய் ஆகியவற்றிலும் பரிந்துரைக்கப்படுகிறது.
வஜ்ரதந்தியை பயன்படுத்தும் விதம்
இதன் இலைகள் வீக்கத்தைக் குறைக்க அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பல்வலி நிவாரணத்திற்காகவும் மென்று சாப்பிடப்படுகிறது. தாவரத்தின் சாறு காய்ச்சல் மற்றும் இருமலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மழை அல்லது குளிர் காலநிலையில் பாதங்களில் விரிசல் ஏற்படாமல் பாதுகாக்க இதன் பூச்சு பாதங்களில் பூசப்படுகிறது. வேரின் கஷாயம் இரத்த சோகை மற்றும் இருமலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | Lungs Health: சுவாசத்திற்கு ஆதாரமான ‘நுரையீரல்’ வலுப்பெற செய்ய வேண்டியவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ