தற்போது சந்தையில் போலி இஞ்சி வருவதாக கூறப்படுகிறது. போலி இஞ்சி உங்கள் ஆரோக்கியத்திற்கு பயனளிப்பதற்கு பதிலாக உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே எச்சரிக்கையுடன், இருக்க வேண்டியது அவசியம்.
இந்திய சமையலறைகளில் இஞ்சி பல விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது. உணவில் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது, அதே போல் டீ தயாரிக்கும் போது இஞ்சி அதில் சேர்க்கப்படுகிறது. இஞ்சி டீ அனைவருக்கும் பிடிக்கும். இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல வகையான நோய்களைத் தவிர்க்கலாம். இந்த நாட்களில் போலி இஞ்சியும் சந்தையில் கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா, இது உங்களுக்கு பயனளிப்பதற்கு பதிலாக உங்கள் ஆரோக்கியத்திற்கு (Health) தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், இஞ்சி உண்மையானதா அல்லது போலியானதா என்பதை வாங்கும் போது பார்த்து வாங்குவது முக்கியம். அதை எப்படி தெரிந்து கொள்வது என்பதைப் பார்க்கலாம்
மலை வேருக்கும் இஞ்சிக்கும் இடையில் வேறுபாடு - ஒரு வகை மலை வேர் இஞ்சி பார்ப்பதற்கு இஞியை போலவே இருக்கும். ஆனால், உண்மையான இஞ்சியில் மணம் அதிக அளவில் இருக்கும். அதேசமயம் போலி இஞ்சியில் வாசனை இல்லை. அதனை நீங்கள் முகர்ந்து பார்த்து அடையாளம் காணலாம்
தோலின் மூலம் அடையாளம் காணவும் - இஞ்சி வாங்குவதற்கு முன், அதன் தோலின் மீது கவனம் செலுத்துங்கள். உண்மையான இஞ்சியில் நகங்களைத் வைத்து அழுத்தி பார்க்கலாம். உண்மையான இஞ்சி என்றால், நகங்கள் எளிதாக உள்ளே செல்லும். மேலும் அதன் வாசனை உங்கள் கைகளில் நீண்ட நேரம் இருக்கும். ஆனால் இஞ்சியின் தோல் மிகவும் கடினமாக இருந்தால், அதை மறந்தும் வாங்காதீர்கள்
பார்ப்பதற்கு சுத்தமாக இருக்கும் இஞ்சியைவாங்காதீர்கள் - இஞ்சி பார்ப்பதற்கு சுத்தமாக இருக்க கடைக்காரர்கள் இஞ்சியை அமிலத்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்கிறார்கள். அதனால், அது போன்ற இஞ்சியை வாங்க வேண்டாம்.
ALSO READ | என்ன செஞ்சாலும் எடை குறையலையா... 7 நாளில் எடையை குறைக்க Military Diet ட்ரை பண்ணுங்க..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR