நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி; கொரோனாவிலிருந்து காக்கும் மூச்சு பயிற்சி

உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கிருமியால் பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 17, 2021, 04:46 PM IST
  • நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஏராளமான விஷயங்கள் தான் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று உதவி வருகிறது.
  • நாம் சாதாரணமான முறையில் சுவாசிக்கும் போது குறைந்த அளவிலான ஆக்ஸிஜன் தான் நுரையீரலை அடைகிறது.
  • மூச்சு பயிற்சி செய்யும் போது, வெறும் வயிற்றில் இருக்க வேண்டும்.
நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி; கொரோனாவிலிருந்து காக்கும் மூச்சு பயிற்சி title=

கொரோனா (Corona) இரண்டாவது அலை பரவி விட்ட நிலையில், அதிலிருந்து நம்மை பாதுகாக்க நமது சித்தர்கள் சொல்லி தந்த அற்புத யுக்தியை கடைபிடித்தாலே போதும். அதற்கான சக்தி  நமக்கு உள்ளேயே இருக்கிறது. அது கொரோனாவை துரத்தும் ஆற்றல் மிக்க சக்தி. 

உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் உடல் ரீதியாக  பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் கிருமியால் பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் உள்ள அனைவரும் இந்த கண்ணுக்கு தெரியாத கிருமியால், ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறலாம். 

இது போன்ற நிலையில் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள சித்தர்கள் கடைபிடிக்கும் யுத்தியை கடை பிடித்தால் போதும். அது தான் மூச்சு பயிற்சி. நம் முன்னோர்கள் சொல்லித் தந்த யுத்தி. சரியான மூச்சுப்பயிற்சி நம் உயிரை காப்பாற்றுவதற்கும், கோவிட்-19 (Covid-19)  என்னும் பெரும் தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கும் மிகச் சிறந்த ஆற்றல் மிக்க கேடயமாக விளங்குகிறது.

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஏராளமான விஷயங்கள் தான் கொரோனாவை கட்டுப்படுத்த இன்றும் உதவி வருகிறது. ஒரு பக்கம் மூலிகை மருத்துவம் அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டு இருக்க, யோகா (Yoga) கொரோனாவில் இருந்து விடுபடவும், பரவலை தடுப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆகி வருகிறது.

நாம் சாதாரணமான முறையில் சுவாசிக்கும் போது குறைந்த அளவிலான ஆக்ஸிஜன் தான்  நுரையீரலை அடைகிறது. முறையான  பயிற்சி மேற்கொள்வதால்  நுரையீரலுக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன்(Oxygen), அதாவது பிராணவாயு கிடைக்கும். இதனால் நுரையீரல் வலு அடைகிறது. கொரோனா என்பது, நமது நுரையீரலை தாக்கும் போது தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. நமது நுரையீரல் வலுவாக இருந்தால் கொரோனாவை எளிதாக வென்று விடலாம்.

ALSO READ | அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு; சானிடைசரை அதிகம் பயன்படுத்துவதும் ஆபத்து

இடது மூக்குத் துவாரத்தின் வழியாக  மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக  வெளிவிடுவது எளிய மூச்சு பயிற்சி ஆகும். யோகாவில், நமது இடது மூக்குத் துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து, பின்னர் அதனை வெளிவிடுவது இடகலை என்று கூறப்படுகிறது. வலது மூக்குத்துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை என்று கூறப்படுகிறது.

மூச்சு பயிற்சி செய்யும் போது,  வயிறு காலியாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். தினமும் ஒரே நேரத்தில் மூச்சு பயிற்சி செய்வது சிறந்த பலனைத் தரும்

இந்த மூச்சு பயிற்சியினால், நுரையீரல் வலுவடையும் என்பதோடு, கூடுதல் பலனாக, நமது  மூளையும் புத்துணர்ச்சி பெறுகிறது. இதனால், நமது  ஞாபக சக்தியும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி  அதிகரிக்கும். COVID-19 தொற்று நோயை எளிதாக விரட்டலாம்.

ALSO READ | பால் குடிப்பதால் நன்மைகள் மட்டுமல்ல, சிலருக்கு பாதிப்புகளும் உண்டு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News