சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்களை அகற்றும் ‘சூப்பர்’ பானங்கள்... தயாரிக்கும் முறை..!

உடலில் இருந்து நச்சுகளை அகற்ற ஆரோக்கியமான சிறுநீரகம் அவசியம். சிறுநீரகங்கள் நமது இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன், இரத்தத்தில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களை வடிகட்டி, சிறுநீரின் மூலம் உடலில் இருந்து வெளியேற்றுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 24, 2023, 05:35 PM IST
  • சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும்.
  • சிறுநீரக நச்சுக்களை நீக்கும் 3 பானங்கள்.
  • சிறுநீரக கற்கள் இருந்தாலும் கொத்தமல்லி சாறு தயாரித்து தினமும் அருந்தலாம்.
சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்களை அகற்றும் ‘சூப்பர்’ பானங்கள்... தயாரிக்கும் முறை..! title=

சிறுநீரகத்தில் உள்ள நச்சு நீக்கும் பானங்கள்: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கம் ஆகியவை நம் உடலில் நச்சுகள் சேருவதற்கான சில முக்கிய காரணங்கள். இது படிப்படியாக பல வகையான நோய்களுக்கு காரணமாகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, நம் உடலில் சேரும் நச்சுக்களை நீக்குவது மிக முக்கியம். உடலில் இருந்து நச்சுகளை அகற்ற ஆரோக்கியமான சிறுநீரகம் அவசியம். சிறுநீரகங்கள் நமது இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன், இரத்தத்தில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களை வடிகட்டி, சிறுநீரின் மூலம் உடலில் இருந்து வெளியேற்றுகிறது. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரும். இந்நிலையில், உங்கள் சிறுநீரகத்தை சுத்தம் செய்ய பெரிதும் உதவும் அத்தகைய 3 பானங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சிறுநீரக நச்சுக்களை நீக்கும் 3 பானங்கள் (Drinks for kidney Detox)

1.கொத்தமல்லி சாறு

கொத்தமல்லி இயற்கையாகவே சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கும் கூறுகளைக் கொண்டுள்ளது. இது தவிர, நமது சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை நீக்கவும் செயல்படுகின்றன. சிறுநீரக கற்கள் இருந்தாலும் கொத்தமல்லி சாறு தயாரித்து தினமும் அருந்தலாம். இதன் மூலம் சிறுநீரக கற்களை (Kidney Stone) விரைவில் அகற்றலாம்.

தேவையான பொருட்கள்

1. 50 கிராம் கொத்தமல்லி இலைகள்

2. 1 கிளாஸ் தண்ணீர்

3. 1 தேக்கரண்டி தேன்

4. 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு

தயார் செய்யும் முறை

1. முதலில் கொத்தமல்லி இலையை நன்றாக நறுக்கவும்.

2. இதற்குப் பிறகு, அதை 1 கிளாஸ் தண்ணீரில் சேர்த்து 10-15 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும்.

3. அதன் பிறகு, அதை வடிகட்டி 1 தேக்கரண்டி எலுமிச்சை மற்றும் தேன் சேர்க்கவும். குளிர்ந்த பிறகு குடிக்கவும்.

2. ஆப்பிள் சைடர் வினிகர் பானம்

ஆப்பிள் சைடர் வினிகர் நமது சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை பெரிதும் உதவுகிறது. இதில் சிட்ரிக், அசிட்டிக் அமிலம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை ஏராளமாக காணப்படுகின்றன. இது நம் உடலில் சேரும் நச்சுக்களை உடைத்து உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த பானத்தை முறையாக உட்கொள்வதன் மூலம் உங்கள் சிறுநீரகத்தை நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

தேவையான பொருட்கள்

1. 1 கிளாஸ் தண்ணீர்

2. 2-3 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர்

தயார் செய்யும் முறை

1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 2-3 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து நன்கு கலக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

மேலும் படிக்க | கல்லீரல் முதல் நுரையீரல் வரை... வியக்க வைக்கும் வெல்லத்தின் மருத்துவ குணங்கள்!

3. பீட்ரூட் ஆப்பிள் ஸ்மூத்தி

பீட்ரூட்டில் வைட்டமின் பி10 நிறைந்துள்ளது. இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பைட்டோ கெமிக்கல் ஆகும். இது நமது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதன் மருத்துவ குணங்கள் சிறுநீரகங்களில் சேரும் நச்சுக்களை நீக்கி, அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்துதில் முக்கிய பங்காற்றுகிறது

தேவையான பொருட்கள்

1. பீட்ரூட் - 1
2. ஆப்பிள் - 1
3. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

தயர் செய்யும் முறை

பீட்ரூட் மற்றும் ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
இவற்றை அரைத்து நன்றாக கலக்கவும்.இவ்வாறு தயாரிக்கப்பட்ட பானத்தில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும். உங்கள் விருப்பப்படி தண்ணீர் சேர்த்தும் குடிக்கலாம்.

மேலே குறிப்பிட்ட  இந்த பானங்கள் அனைத்தும் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது. இவற்றை தினமும் உட்கொள்வதன் மூலம் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இந்த பானங்கள் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றாலும், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | குறைவாக சாப்பிடணும்... வயிறு நிறைவாகவும் இருக்கணுமா... ‘இந்த’ டிப்ஸ் உதவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News