நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மிக முக்கியமானதாக இருந்தாலும், சில உறுப்புகள் பாதிக்கப்பட்டால், உடலின் முழு செயல்பாட்டையுமே பாதித்து விடும். அதில் ஒன்று சிறுநீரகம். சிறுநீரக கற்கள் இன்று மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நமது உணவு பழக்கம். ஆம், நீங்கள் உண்ணும் கால்சியம்-ஆக்சலேட் அதிகம் உள்ள சில உணவுகள் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும் சில கார்கறிகள்:
கத்தரிக்காய்
கீரையைப் போலவே, கத்தரிக்காயிலும் ஆக்சலேட்டுகள் உள்ளன, இது கற்களின் அளவை அதிகரிக்க உதவுகிறது. சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் கத்திரிக்காயை அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.
கீரை
உங்களுக்கு ஏற்கனவே கற்கள் பிரச்சனை இருந்தால், கீரை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துங்கள். ஏனெனில் அது சிறுநீரக கற்கள் பிரச்சனையை மேலும் அதிகரிக்கிறது. கீரையில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம் உடலில் கால்சியம்-ஆக்சலேட்டை ஏற்படுத்தும். இதன் காரணமாக சிறுநீரக கல்லின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.
மேலும் படிக்க | Health Alert: இரவில் சாப்பிடக் கூடாத ‘சில’ பழங்கள்!
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்வதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொள்வதால், உடலில் பொட்டாசியத்தின் அளவு அதிகரிக்கிறது. இது 'ஹைபர்கேலீமியா' என்று அழைக்கப்படுகிறது.
தக்காளி
தக்காளி சிறுநீரக கல் அபாயத்தை அதிகரிக்கிறது. தக்காளி விதையில் உள்ள ஆக்சலேட் உடலில் கற்களை உண்டாக்குகிறது. தக்காளியில் ஆக்சலேட் குறைந்த அளவில் காணப்பட்டாலும், தேவைக்கு அதிகமாக தக்காளியை உட்கொள்வது பிரச்சனையை அதிகரிக்கும்.
மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ