கல்யாண முருங்கை`Erythrina Indica’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்டது. இதை, `முள் முருங்கை’, `முருக்க மரம்’, `கல்யாண முருக்கன்’, `முள் முருக்கு’ என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் பயன்கள்கொண்டவை
முடி உதிர்வதைத் தடுக்க
தினமும் நெல்லிக்காய்ப்பொடி அதிகம் சேர்க்கப்பட்ட திரிபலா லேகியத்தை சாப்பிட்டு வர முடி உதிர்வது நின்று நன்கு வளரத் தொடங்கும்.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய.. காலை உணவில் சேர்க்க வேண்டியதும்... சேர்க்க கூடாததும்..!
குழந்தை வளர்ச்சி
கீழாநெல்லி இலையை அரைத்து ஒரு சுண்டைக்காயளவு பாலோடு சேர்த்து கொடுத்து வர நோய்கள் நீங்கி குழந்தை திடகாத்திரமாய் வளரும்.
வெண் குஷ்டத்திற்கு
சங்கு பூக்களுடன் அதன் வேரையும் நன்றாக அரைத்து வெண் குஷ்டம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி வர நல்ல குணம் தெரியும்.
எலுமிச்சை மருத்துவம்
சிறிது எலுமிச்சை சாறுடன் தக்காளி சாறும் தேனும் கலந்து காலை. மாலை ஓர் அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரல் சீர்கேடு குணமாகும். சிறுநீரிலுள்ள சர்க்கரைப் பொருளும் குறைந்து விடும். க்ஷயரோக இருமல் கூட குணமாகும்.
கல்யாண முருங்கையின் இலைச்சாறு சிறுநீர் எரிச்சலைப் போக்கி தாராளமாக நீர் இறங்கச் செய்யும். பெண்கள் தினமும் காலை, மாலை ஓர் அவுன்ஸ் சாறு குடித்து வர மலட்டுத் தன்மை மாறும். நீண்டகால நீர்ச்சுருக்கு. நீர் எரிச்சல் வியாதிகள் உள்ளவர்கள் பருகி வர நல்ல பலன் கிடைக்கும்.
இணைப்புத் தசைகளில் வலி
குப்பைமேனி இலைச் சாறும் ஆமணக்கு எண்ணெயும் சமமாக கலந்து நீர் சுண்டக் காய்ச்சி கை, கால், இடுப்பு. புஜம் போன்ற இணைப்புத் தசை களில் ஏற்படும் வாத வலிகளுக்குப் பயன்படுத்த நல்ல பலன் கிட்டும்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த விதைகளில் இருக்கு அதற்கான வழி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ