Covid-19 தடுப்பூசி Halal என்றால் இந்தோனேசிய மக்களின் கதி என்ன?

Covid-19 தடுப்பூசி Halal என்றால் இந்தோனேசிய மக்களின் கதி என்ன? இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் இந்தோனேசியாவில், தடுப்பூசி ஹலால் இல்லை என்று மத குழு ஒப்புதல் அளித்த பிறகு தான் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த முடியும்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 6, 2021, 09:54 PM IST
  • கொரோனா தடுப்பூசி ஹலாலா?
  • ஹலால் இல்லை என்கிறது சினோவாக் மருந்து தயாரிப்பு நிறுவனம்
  • ஹலாலாக இருந்தாலும் பரவாயில்லை என சில நாடுகள் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துவிட்டன
Covid-19 தடுப்பூசி Halal என்றால் இந்தோனேசிய மக்களின் கதி என்ன? title=

புதுடெல்லி: கோவிட் -19 தடுப்பூசி ஹலாலா இல்லையா என்ற முடிவை தெரிந்துக் கொள்ள இந்தோனேசிய மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதாக இருக்க வேண்டும், விரைவில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று காத்திருக்கின்றனர். ஆனால், இந்தோனேசியாவில் மாறுபட்டிருக்கிறது.

"கொரோனாவுக்கான தடுப்பூசி ஹலாலா? இல்லையா என்பதைப் பற்றி எந்த கவலையும் இருக்கக்கூடாது" என்று இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ (Joko Widodo) கூறுகிறார். "COVID தொற்றுநோயால் நாம் அவசரகால சூழ்நிலையில் இருக்கிறோம்." இந்த ஒற்றை வாக்கியத் தகவல் சொல்வது மிகப் பெரிய விஷயத்தை என்பதை புரிந்துக் கொள்வது சுலபம் தான். 

கடந்த  ஜூலை மாதம் சீன தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சினோவாக் (Sinovac), இந்தோனேசியா அரசுக்கு எழுதிய கடிதத்தில் “கொரோனா தடுப்பு மருந்தில் பன்றி இறைச்சிப் பொருட்கள் இல்லை” என்று கடிதம் எழுதியது.

Also Read | Coronavirus தடுப்பூசியால் பாதுகாக்கப்படும் முதல் பசிபிக் நாடு எது தெரியுமா?

ஆனால் இந்தோனேசிய மதகுருக்கள் அதைத் தவிர கூடுதல் விவரங்கள் கேட்டனர். உலகின் மிகப் பெரிய முஸ்லீம் மக்கள் வசிக்கும் இந்தோனேசியாவில் இஸ்லாமிய கொள்கைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.  கொரோனா தடுப்பூசியில் பன்றியின் டி.என்.ஏ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தினால் கொரோனா தடுப்பு மருந்தை புறக்கணிக்கப்போவதாக சில இஸ்லாமிய மத குழுக்கள் தெரிவித்து வந்தனர். 

தென்கிழக்காசியா நாடுகளில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டது இந்தோனேசியா (Indonesia). ஆனால், தடுப்பூசி  பாதுகாப்பானதா?  அது ஹலாலா?  தடுப்பூசியை பயன்படுத்தினால் இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு பங்கம் வருமா? என்பது போன்ற மத சார்ப்புடைய கேள்விகள் தற்போது இந்தோனேசிய அரசுக்கு சிக்கலை அதிகரித்துள்ளது.

Vaccine

இந்தோனேசியாவில், 8 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. பலி எண்ணிக்கை 23,000ஐ தாண்டியது. சினோவாக் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று நாட்டின் சுகாதார அதிகாரிகள் ஒப்புதல் கொடுத்த உடனே, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்படும் என்று இந்தோனேசிய அரசு தெரிவித்தது.

இந்தோனேசியாவில் ஹலால் தொடர்பான பொருட்களுக்கு ஒப்புதல் வழங்கும் உலேமா கவுன்சில், கொரோனாவுக்கான தடுப்பூசியை பரிசீலித்த பிறகே தனது முடிவை அறிவிக்கும். 

Also Read | Coronavirus-ஐ வெல்ல LED பல்புகள் உதவக்கூடும்: சமீபத்திய ஆய்வு

இந்த நிலையில் ஒருவேளை கொரோனா தடுப்பூசி ஹலால் என்று தெரியவந்தால், இந்தோனேசிய மக்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்துள்ளது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News