Corona New variant: கோவிட் நோய் அதிகரிப்பதற்கு காரணம் ஒமிக்ரானா இல்லை டெல்மிக்ரானா?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் COVID-19 பாதிப்புகள் அதிகரிப்பதற்கு காரணம் 'டெல்மிக்ரான்' என்ற புதிய கொரோனா பிறழ்வா? 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2021, 12:46 PM IST
  • ஒமிக்ரானுக்கும் டெல்மிக்ரானுக்கும் உள்ள வேறுபாடு
  • கோவிட் அதிகரிக்க காரணம் ஒமிக்ரானா
  • டெல்மிக்ரான் அமெரிக்கா, ஐரோப்பாவை பாதிக்கிறதா?
Corona New variant: கோவிட் நோய் அதிகரிப்பதற்கு காரணம் ஒமிக்ரானா இல்லை டெல்மிக்ரானா? title=

கொரோனா வைரஸ் வழக்குகளின் சமீபத்திய அதிகரிப்பு காரணமாக, பல அமெரிக்க மாநிலங்களும் ஐரோப்பிய நாடுகளும் கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தத் தொடங்கிவிட்டன.

தற்போது ஏற்படும் பாதிப்புக்கு காரணம் கொரோனா வைரஸ் மாறுபாடு ஒமிக்ரான் (Omicron variant) என்று கூறப்பட்டாலும், சில நிபுணர்கள் இந்தக் கூற்றுக்களை நிராகரித்துள்ளனர். அவரைப் பொறுத்தவரை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கோவிட் வழக்குகள் அதிகரிப்பதற்கு டெல்மிக்ரான் வகை கொரோனா வைரஸே காரணம்.

டெல்மிக்ரான் Delmicron என்றால் என்ன?

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, டெல்மிக்ரான் என்பது டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகைகளின் கலப்பின வைரசாகும். 

மஹாராஷ்டிராவின் கோவிட்-19 பணிக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஷஷாங்க் ஜோஷி, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் டெல்மிக்ரான் அல்லது டெல்டா மற்றும் ஓமிக்ரானின் இணைவால் ஏற்பட்ட புதிய வகை வைரஸால் (hybrid of the Delta and Omicron variants) கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக பல ஊடக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Read Also | ஒமிக்ரான் பரவலால் இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?

அதிகாரப்பூர்வ கருத்து:
கொரோனா வைரஸின் ஒரு புதிய திரிபு உருவாகிறது என்ற கூற்றுகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (World Health Organization)இன்னும் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இந்தியாவில், கோவிட்-19க்கான தேசிய பணிக்குழுவோ அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலோ (ICMR) "டெல்மிக்ரான்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

இதற்கிடையில், மருத்துவ நிபுணரும் மகாராஷ்டிர அரசின் கோவிட் பணிக்குழு உறுப்பினருமான ஷஷாங்க் ஜோஷியின் டெல்மிக்ரான் என்ற புதிய வைரஸ் பிறழ்வு தொடர்பான தகவல் உறுதியாகிவிடுமோ என்ற கவலைகளும் அதிகரிக்கின்றன.

கொரோனா தொற்றின் புதிய பிறழ்வான ஒமிக்ரான் மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.  இந்த நோய்த்தொற்றால் இந்தியாவில் இதுவரை சுமார் 213க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா வைரஸை விட மூன்று மடங்கு அதிவேகமாக பரவக்கூடியது ஒமிக்ரான் என்று கூறப்படுகிறது.

டெல்டா வைரஸை விட ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்பதற்கான சான்றுகள் உள்ளது.  விடுமுறை காலங்களில் மக்கள் அதிகமாக கூடுவதால், ஒமிக்ரான் வைரஸ் அதிகளவில் பரவும் ஆபத்துள்ளது என்று இந்தியாவில் ஒமிக்ரான் அதிகமாக பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்காக, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், கொரோனவிலிருந்து மீண்டவர்கள் என அனைவருக்கும் இந்த நோய் பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.  ஆனால், இன்னும் தடுப்பூசி (Covid Vaccination) செலுத்தி கொள்ளாமல் இருப்பவர்களாலும் கோவிட் நோய் பரவலாம் என்று கூறப்படுகிறது.

ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News