துணியிலான முகக்கவசங்களை பயன்படுத்துவது பாதுகாப்பானதா?

ஒமைக்ரான் தொற்றுநோயின் பரவல் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2021, 03:14 PM IST
  • இரண்டு அல்லது மூன்று அடுக்குகள் கொண்ட முகக் கவசங்கள் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும் அவை பெரும்பாலும் ஃபேஷனுக்காக தான் பயன்படுத்தப்படுகிறது.
  • கடந்த கோடைகாலத்தில் தளர்வுகள் அளித்த நிலையில், தற்போது இந்த வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது.
துணியிலான முகக்கவசங்களை பயன்படுத்துவது பாதுகாப்பானதா? title=

இரண்டு அல்லது மூன்று அடுக்குகளால் தயாரிக்கப்படும் முகக் கவசங்கள் பயனுள்ளதாக கருதப்பட்டாலும், அவை பெரும்பாலும் ஃபேஷனுக்காக தான் உபயோகிக்கப்படுகிறது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆரம்ப சுகாதார பேராசிரியர் ட்ரிஷ் கிரீன்ஹால்க் கூறியுள்ளார். ஒமைக்ரான் தொற்றானது தற்போது மக்கள் பயன்படுத்தும் வண்ணமயமான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான முகக்கவசங்கள் அணிவதை பற்றி மீண்டும் ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க செய்துள்ளது.  இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆரம்ப சுகாதார பேராசிரியர் கிரீன்ஹால்க் கூறுகையில், துணியிலான முகக்கவசங்கள் 'மிகவும் நல்லவை அல்லது பயங்கரமானவை' என்பது அதைத் தயாரிக்க பயன்படுத்தும் துணியின் வகையை பொருத்தது.

ALSO READ | சேலத்துக்கு வந்தது ஒமிக்ரான்! 

சிலவற்றின் கலவையால் உருவாக்கப்படும் இரண்டு அல்லது மூன்று அடுக்குகள் கொண்ட முகக் கவசங்கள் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும் அவை பெரும்பாலும் ஃபேஷனுக்காக தான் பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.  ஒமைக்ரான் தொற்றுநோயின் பரவல் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில் பிரிட்டன் அரசு மக்கள் அனைவரும் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. அதன் அடிப்படையில் கடைகள், பிற இடங்களுக்கு செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

mask

கடந்த கோடைகாலத்தில் தளர்வுகள் அளித்த நிலையில், தற்போது இந்த வைரஸ் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது.  அதன்படி எங்கு, எப்போது முகக்கவசம் அணிய வேண்டும், எந்த மாதிரியான முககவசங்களை அணிய வேண்டும் என்றும் பல தகவல்கள் கூறப்பட்டுள்ளது. மேலும் N95 மாதிரியான முக கவசங்களை தயாரிப்போர் அதை கிட்டத்தட்ட 95% கிருமிகளை வடிகட்டுகிறதா என்பதை நிச்சயம் உறுதிசெய்ய வேண்டும்.  இருப்பினும் நீங்கள் உங்கள் வாய் மற்றும் மூக்கை முகக்கவசத்தால் சரியாக மூடவில்லையெனில் அவ்வாறு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட முகக்கவசம் எந்தவித பயனையும் அளிக்காது.

n95

சுற்றுச்சூழல் குறித்தோ அல்லது பணம் குறித்தோ கவலை கொள்ளும் மக்கள் துணியிலான முக கவசத்தை நாடுகின்றனர்.  ஏனெனில் அவற்றை துவைத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.  அதேபோல தான் கிருமிகளை சிறந்த முறையில் வடிகட்டும் வகையிலும், மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையிலும் உறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  இறுக்கமான முகக்கவசங்களை அணிந்து கொள்வதற்கு பதிலாக, ஒற்றை அடுக்கு முகக்கவசத்தை அணிந்து கொள்ளலாம் என்று ஏற்கனவே கனடாவில் கூறப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஒன்டாரியோவின் அறிவியல் ஆலோசனை கூட்ட தலைவர் பீட்டர் ஜூனி கூறுகையில், ஒற்றை அடுக்கு முகக்கவசங்களில் கிருமிகளை வடிகட்டும் திறன் சற்று குறைவாக தான் இருக்கும், மேலும் இவை எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்.

ALSO READ | Omicron: ஒமிக்ரான் புதிய கட்டுப்பாடுகள்? பிரதமர் மோடி இன்று ஆலோசனை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News