Corona Vaccine: கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்தில் இந்தியா

கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளுக்குப் பரவியபோது WHO உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்த போது, முன்னெச்சரிக்கையைத் தவிர வேறு எந்த சிகிச்சையும் இல்லாத நிலையில், கோவிட்-19க்கு தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளை உலக நாடுகள் எடுத்தன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 29, 2020, 08:42 AM IST
  • புனேவில் உள்ள சீரம் நிறுவனம் உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனம்
  • ஒப்புதல்கள் கிடைத்த உடனேயே, 3 முதல் 4 மில்லியன் டோஸ்களை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும்
  • மார்ச் மாதத்தில் விலங்குகள் மீது மருத்துவ சோதனைகளைத் தொடங்கியது இந்தியாவின் ஃபார்மா மேஜர் ஸைடஸ் காடிலா
  • கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்தின் வெவ்வேறு கட்டங்களில் ஏழு இந்திய மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன
Corona Vaccine: கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்தில் இந்தியா title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளுக்குப் பரவியபோது WHO உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்த போது, முன்னெச்சரிக்கையைத் தவிர வேறு எந்த சிகிச்சையும் இல்லாத நிலையில், கோவிட்-19க்கு தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளை உலக நாடுகள் எடுத்தன.

இந்தியாவும் அந்த முயற்சியில் முன்னணியில் இருக்கிறது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கம் மற்றும் மருந்து சோதனைகளைக் கண்காணிக்க அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே. விஜய் ராகவன் மற்றும் நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் டாக்டர் வினோத் கே பால் தலைமையில் பல்துறை தேசிய பணிக்குழுவை இந்தியா அமைத்தது.

இந்தப் பணிக்குழுவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்), உயிரி தொழில்நுட்பத் துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, சுகாதார சேவைகள் இயக்குநரக ஜெனரல் மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பின் வல்லுநர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தற்போதுள்ள மருந்துகளை ஆராய்ந்து மறுநிலைப்படுத்தல், புதிய மருந்துகளை உருவாக்குதல், மற்றும் பொதுவான வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை தயாரித்தல் என பல்வேறு முன்முயற்சிகள் தொடங்கப்பட்டன.

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து உருவாக்குவதற்கான முயற்சியில் 160 ஆராய்ச்சிகள் மேம்பட்ட நிலையில் உள்ளன.

இந்தியாவில், மறுசீரமைப்பு டி.என்.ஏ தொழில்நுட்பம் மற்றும் மரபணு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மார்ச் மாதத்தில் விலங்குகள் மீது மருத்துவ சோதனைகளைத் தொடங்கியது ஃபார்மா மேஜர் ஸைடஸ் காடிலா. கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்தில் ஸைடஸ் உட்பட ஏழு இந்திய மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

Real Also | JULY 29: உலக அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்

புனேவில் உள்ள சீரம் நிறுவனம் உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனம். சீரம், பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஸெனெகாவுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஸெனெகா ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட Covishield எனும் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது தற்போது பிரேசிலில் மூன்றாம் கட்டமாக மனிதர்களுக்கு பயன்படுத்தி சோதனை செய்யப்படுகிறது.

தேவையான ஒப்புதல்கள் கிடைத்த உடனேயே, 3 முதல் 4 மில்லியன் டோஸ்களை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும். ஒரு மாதத்திற்கு 100 மில்லியன் டோஸ்கள் என்ற அளவில் தயாரிக்குமளவுக்கு சீரம் நிறுவனத்திற்கு உற்பத்தித் திறன் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, தற்போது பரிசோதனை முயற்சியில் மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும் தடுப்புமருந்து சோதனை வெற்றி பெற்றால், இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா என்ற கொடூரமான தொற்றுநோயை கட்டுப்படுத்தும் உயிர் காக்கும் தடுப்பு மருந்தை உருவாக்குவதில் இந்தியா வெற்றி பெறும்.

Trending News