பழங்களும், பச்சைக் காய்கறிகளும் உடலுக்கு உகந்தவை. நோய்களை தூர விரட்டுபவை. அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிட்டால் நோய் நம்மை விட்டு விலகிச் சென்றுவிடும்.
பெயரிலே காயாக இருந்தாலும், இது கனி. அப்படியே சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் கொடுப்பது.இதயம் மற்றும் ரத்த நாளங்களுக்கு பேரிக்காய் சிறந்தது. இந்தப் பழத்தில் உள்ள நார்ச்சத்து கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
பேரிக்காயில் இருக்கும் நார்ச்சத்து, ஃபிளவனோல்கள் (flavanols) மற்றும் ஆன்டிசிட்கள் (anthicids) என அனைத்தும் இணைந்து நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
Also Read | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்
இந்த மூன்று சத்துக்களும் கூட்டணி வைத்துக் கொண்டால், டைப் 2 நீரிழிவு நோய் ஓடிப்போகும். அதற்கு காரணம் இந்த சத்துக் கூட்டணி இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும். இதனால், உடலுக்கு தேவையான இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் எளிதில் உறிஞ்சப்படும்.
பேரிக்காயில் வைட்டமின் சி, தாமிரம் மற்றும் பிற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் நோயெதிர்ப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட உதவுகின்றன, அதேபோல, நோய்வாய்ப்பட்டவர்கள் பேரிக்காயை தொடர்ந்து உண்டு வந்தால், விரைவில் குணமடையலாம்.
தினசரி நமக்கு தேவையான 20% நார்ச்சத்துக்கள் ஒரு பேரிக்காயில் உள்ளன. செரிமான அமைப்புக்கு நார்ச்சத்து மிகவும் உதவும். பேரிக்காயை தொடர்ந்து உண்டு வருவதால், ஆரோக்கியமான குடல் பாக்டீரியா மேம்படும்.
Also Read | இந்தக் காய் உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நீர்க்காய்
இது நமது குடலை உள்ளே இருந்து சுத்தம் செய்கிறது. அதுமட்டுமல்ல, பேரிக்காய் சிறந்த மலமிளக்கி என்பதால், இந்தப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால், மலச்சிக்கல் என்ற சிக்கலே எழாது.
சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவோம். பளிச்சென்ற சருமத்திற்கு உத்தரவாதம் கொடுக்கிறது பேரிக்காய். சருமங்களில் ஏற்படும் சுருக்கத்தை பெருக்கவிடாமல் பாதுகாக்கும் பேரிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் காப்பர் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
இவை அனைத்தும் சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன. தோல் மென்மையாகவும், பிரகாசமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டுமானால் பேரிக்காயை தொடர்ந்து சாப்பிடுங்கள்.
Also Read | மதிய உணவில் சாப்பிட ஏற்றது எது? தவிர்க்க வேண்டியவை எவை?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR