உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார் தெரியுமா?

Amaran Movie Real Indhu Rebecca Varghese : அமரன் திரைப்படம், இன்று வெளியாகி மக்களின் வரவேற்ப்பை பெற்றிருக்கும் நிலையில், உண்மையான இந்து ரெபேக்கா வர்கீஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? 

Amaran Movie Real Indhu Rebecca Varghese : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், அமரன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம், உண்மை சம்பவங்களை பறைசாற்றும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில், மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாப்பாத்திரம் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. இவர், உண்மையில் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? இங்கு அது குறித்து பார்ப்போம். 

1 /8

சிவகார்த்திகேயன் நடிப்பில், தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் படம், அமரன். இவரது கடைசி சில படங்கள் தோல்வியில் முடிய, இந்த படம் அவருக்கு கம்-பேக் ஆக அமைந்திருக்க்கிறது. 

2 /8

2014ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய புல்வாமா தாக்குதலில், வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதையாக உருவாகியிருக்கிறது. 

3 /8

முகுந்த் ஆக சிவகார்த்திகேயன் நடிக்க, அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். 

4 /8

படம் பார்த்தவர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவராகிவிட்டார் இந்து. இவர், அமரன் படத்தின் ப்ரமோஷன்களில் கலந்து கொண்டு தனது கணவர் குறித்து பேசியது நெகிழ்ச்சிக்குறியதாக இருந்தது. 

5 /8

இந்து, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இவரும் அவரது கணவர் முகுந்தனும் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகுதான் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன 8-7 ஆண்டுகளுக்குள்ளேயே முகுந்த் உயிரிழந்திருக்கிறார். 

6 /8

படத்தில், இந்து ஆசிரியை ஆவதற்காக முயற்சி செய்வதையும், அவர் டீச்சர் ட்ரெயினிங் கோர்ஸ் முடித்ததையும் கூறியிருந்தனர். 

7 /8

அதன்படி, இந்து தற்போது ஒரு ஆசிரியையாகத்தான் இருக்கிறார். ஆனால், அவர் இந்தியாவில் இல்லை. 

8 /8

ஆஸ்திரேலியாவில் அவர், ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருப்பதாக படத்தின் இறுதியில் காண்பிக்கப்பட்டது.