ஜிம்மிற்கு போக வேண்டாம்-டயட் இருக்க வேண்டாம்..இதை செய்து உடல் எடையை ஈசியாக குறைக்கலாம்..!

Weigth Loss Tips: சிலரால் தங்கள் உடல் சம்பந்தப்பட்ட காரணங்களினால் டயட் இருக்கவோ உடற்பயிற்சி செய்யவோ இயலாமல் போகும். ஆனால் அவர்களுக்கு தங்களின் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கான குறிப்புகள்தான் இது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 18, 2023, 01:52 PM IST
  • ஜிம்மிற்கு போகாமல் டயட் இருக்காமல் உடல் எடையை குறைக்கலாம்.
  • சில வீட்டு வேலைகளை நீங்களே செய்து பழக வேண்டும்.
  • புரதத்தை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஜிம்மிற்கு போக வேண்டாம்-டயட் இருக்க வேண்டாம்..இதை செய்து உடல் எடையை ஈசியாக குறைக்கலாம்..! title=

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு “நேரம்” என்பது எப்போதும் கிடைக்கும் ஒன்றல்ல. சிலரால் தங்களது உடல்நிலை காரணமாக டயட் இருக்கவோ உடற்பயிற்சி செய்யவோ முடியாமல் போகலாம். அதற்கு நேரமின்மையும் ஒரு காரணமாக அமையலாம். இப்படி எதுவும் செய்யாமல் கூட நம்மால் உடல் எடையை குறைக்க முடியும். அது எப்படி தெரியுமா? 

சமைத்து பழகுங்கள்...

நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் எப்படி சாப்பிட வேண்டும் எந்த அளவிற்கு சாப்பிட வேண்டும் ஆகிய் விஷயங்களை நீங்களே முடிவு செய்யுங்கள். அதற்கு அடிப்படையாக சமைக்க கற்றுக்கொள்ளுங்கள். விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்களுக்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்பது தெரியும். அதில் காய்கறி, பழங்கள் போன்ற பலவகையான உணவுகளும் அடங்கும். 

மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் பழம்! மூளை மற்றும் எலும்புகளை பலப்படுத்தும் லிச்சி ஜூஸ்

புரதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்: 

புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால் பசியை கட்டுப்படுத்த முடியும். இது உங்கள் மெட்டபாலிஸத்தையும் அதிகரிக்கும். இளம் பெண்களை வைத்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவர்களுக்கு மத்திய உணவிற்கு பிறகு தயிர் கொடுக்கப்பட்டது. இதில், புரதம் நிறைந்துள்ளதால் அவர்களின் பசியின்மையை கட்டுப்படுத்த முடிந்தது. 

நல்ல உறக்கம்: 

உடல் எடையை குறைப்பதில் நல்ல தூக்கம் அதிக பங்கு வகிக்கிறது. இரவில் தாமதமாகி தூங்கி காலையில் சீக்கிரமாக எழுந்து கொள்வது, இரவில் சீக்கிரமாக உறங்கி காலையில் தாமதமாக எழுவது ஆகிய இரண்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, உங்கள் தூக்கத்திற்கான நேரத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்காதீர்கள். 

நன்கு மென்று சாப்பிடுங்கள்:

உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது, அதிகமாக சாப்பிடும் பழக்கம் மட்டுமல்ல அதை அதிகமாக மென்று சாப்பிடாத பழக்கமும்தான். எந்த திடமான உணவை சாப்பிட்டாலும் அதை நன்கு மென்று சாப்பிட பழகிக்கொள்ளுங்கள். இப்படி நன்கு சவித்து சாப்பிடுவதனால், உணவு எளிதில் செரிமானத்திற்கு வந்துவிடும். உடல் எடையும் ஏறாமல் இருக்கும். 

மனதை அமைதிப்படுத்துங்கள்:

உடல் எடையை கட்டுப்படுத்த வயிற்றை கட்டுப்படுத்தினால் மட்டும் போதாது. மனதையும் அமைதிப்படுத்த வேண்டும். நாம் அதிகம் மனக்கவலையில் இருக்கும் போது உடல் நலனில் கவனம் செலுத்த தவறி விடுவோம். இதனால், அதிகம் சாப்பிடுவது, அதிகம் தூங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவோம். இது, நமது சோம்பேறி தனத்தை அதிகரிக்கும், உடல் எடை குறைக்கும் முயற்சியில் வளர விடாமல் தடுக்கும். எனவே, மனம் அவ்வப்போது எதையாவது நினைத்து அசைப்போட்டு அழும் போது, அதை அமைதிப்படுத்த வேண்டியது முக்கியம். இதற்கு மூச்சுப்பயிற்சி அல்லது யோகா பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். 

தினசரி வேலைகள்: 

முடிந்தவரை உங்களுக்கான வேலைகளை நீங்களே செய்ய பழகி கொள்ளுங்கள். உங்களுக்காக சமைத்து கொள்வது, உங்கள் துணிகளை துவைப்பது, நீங்கள் இருக்கும் இடத்தை தினமும் சுத்தம் செய்வது, போன்ற விஷயங்களை உங்களுக்காக நீங்களே செய்து பழகுங்கள். இது, கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்குள் நல்லொழுக்கத்தை கொண்டுவரும். உடல் எடையை குறைக்கவும் தூண்டுகோளாக இருக்கும். 

படியை உபயோகப்படுத்துங்கள்: 

வீட்டிற்கு செல்லும் போதோ அல்லது அலுவலகத்திற்கு செல்லும் போதோ மின் தூக்கி அல்லது மின் படிக்கட்டுகளுக்கு பதில் படியை உபயோகியுங்கள். இது பெரிய அளவிலான உடற்பயிற்சி இல்லை என்றாலும் எடை குறைக்கும் பயிற்சியில் உறுதுணையாக இருக்கும். 

மேலும் படிக்க | அழிஞ்சில் பழத்தை அதிகமாக சாப்பிடுகிறீர்களா? கவனமாக இருங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News