உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்!

பலர், தங்களின் உடல் எடையை குறைக்க மிகுந்த சிரமப்படுவர், அவர்களுக்கு, வேகமாக எடையை குறைக்க உதவும் சில முறைகள் குறித்து இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Apr 26, 2024, 05:33 PM IST
  • 5 நிமிட வர்க் அவுட்
  • உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்
  • ஈசியான டிப்ஸ் இதோ!
உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? தினமும் 5 நிமிடம் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்! title=

உடல் எடையை குறைப்பது என்பது, பலர் நினைக்கும் அளவிற்கு அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதற்கு, தினம் தோறும் நாம் கடின முயற்சியையும் உழைப்பையும் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். உடற்பயிற்சியுடன் சேர்த்து, சரியான டயட், உடலுக்கு தேவையான கொழுப்பினை அளவுடன் எடுத்துக்கொள்வது, தினசரி சரியான அட்டவனையில் இயங்குவது என பல்வேறு விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. உடல் எடையை குறைக்க விரும்பும் பலருக்கு, இவை அனைத்தையும் செய்ய முடியுமா என்பதும், இவற்றை செய்வதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கிறதா என்பதும் நமக்கு தெரியாது. ஆகையால், இதற்கென்றே சில வழிகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதில் ஒன்றுதான் இந்த 5 நிமிட உடற்பயிற்சி. 

5 நிமிட உடற்பயிற்சி:

என்னது 5 நிமிட உடற்பயிற்சிதானா? என்று பலருக்கு சந்தேக குறியும், ஆச்சரிய குறியும் தலைக்குள் தோன்றலாம். ஆனால், இது குறித்து கூறும் மருத்துவர்கள் ஒரு நாளில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சி (HIIT Workouts) செய்வது, உடலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் உடல் எடையும் குறையும் என்றும் கூறுகின்றனர். அப்படி, நமக்கு உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 5 நிமிட உடற்பயிற்சிகள் என்னென்ன தெரியுமா? 

ஸ்கிப்பிங்:

சிறு வயதில், பலர் இந்த கயிறு தாண்டுதல் உடற்பயிற்சியை விளையாட்டாக செய்திருப்போம். ஆனால், வளர்ந்த பிறகுதான் தெரிகிறது இது உடல் எடையை குறைக்க உ தவும் நல்ல கார்டியோ உடற்பயிற்சி என்று. காலையில் எழுந்தவுடன் ஒரு ஸ்கிப்பிங் ரோப்பை எடுத்துக்கொண்டு எவ்வளவு நேரம் வேண்டுமோ அவ்வளவு நேரம் கயிறு தாண்டுங்கள். இது, உடல் எடையை குறைக்க உதவுவதோடு, நினைவு திறனையும் கூர்மையாக்குமாம். நமது இதயத்துடிப்பை சீராக வைத்திருப்பதோடு, கொழுப்புகளை குறைக்கவும் இந்த உடற்பயிற்சி உதவுகிறது. 

சர்க்யூட் உடற்பயிற்சிகள்:

வெவ்வேறு உடற்பயிற்சிகள் கலந்த வர்க்-அவுட் நிலையை சர்க்யூட் உடற்பயிற்சி என்று கூறுவர். உதாரணத்திற்கு, 30 விநாடிகள் ஜம்பிங் ஜேக்ஸ் உடற்பயிற்சிகள் செய்தால் 10-15 விநாடிகள் ஓய்விற்கு பிறகு புஷ் அப்ஸ், பர்பீஸ் போன்ற உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இவை, தீவிர உடற்பயிற்சிகளின் லிஸ்டில் வரும். ஓட்டப்பயிற்சி மேற்கொள்வதும் கூட ஒரு வித சர்க்யூட் உடற்பயிற்சிதான். 

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை சொல்லி அடிக்கும் சூப்பர் டீ: தினமும் குடிங்க

ப்ளாங்க்ஸ்:

தொப்பையை குறைக்க உதவும் உடற்பயிற்சிகளுள் முக்கிய இடத்தை பெற்றது, ப்ளாங்க்ஸ். இதனை, கை முட்டி மற்றும் கணுக்காலின் உதவியுடன் செய்ய வேண்டும். இரு கைகளால் பேலன்ஸ் செய்யும் ப்ளாங்க்ஸ், முட்டியால் பேலன்ஸ் செய்யும் ப்ளாங்க்ஸ் என பல வகையான ப்ளாங் உடற்பயிற்சிகள் உள்ளன. வயிற்று பகுதியில் இருக்கும் தேவையற்ற தசைகளை குறைக்க உதவும் உடற்பயிற்சி இது. இதனை 30 விநாடிகள் முதல் 1 நிமிடம் வரை தாக்குப்பிடித்து செய்யலாம். 

மௌண்டைன் க்ளைம்பர்ஸ்:

இருந்த இடத்தில் இருந்தே மலை ஏறுவது போல செய்யும் உடற்பயிற்சிக்கு பெயர்தான், ‘Mountain Climbers’. இதை பார்ப்பதற்கு சிம்பிளாக இருப்பது போல தோன்றினாலும் தீவிர உடற்பயிற்சியாக பலரால் இது பார்க்கப்படுகிறது. இதை, தரையில் கை வைத்தும் செய்யலாம், அல்லது ஒரு நாற்காலியை பிடித்துக்கொண்டும் செய்யலாம். இது, இதய துடிப்பை அதிகரித்து கொழுப்பை கரைக்கும் உடற்பயிற்சிகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

பர்பீஸ்:

பர்பீஸ், கொஞ்சம் கடினமான உடற்பயிற்சியாக சிலர் மத்தியில் பார்க்கப்படுகிறது. இந்த உடற்பயிற்சி, நமது உடலில் உள்ள அனைத்து தசைகளையும் சேர்த்து ஒருங்கிணைத்து செய்யக்கூடிய உடற்பயிற்சியாகும். இது, உடலில் கூடுதலாக இருக்கும் கொழுப்பு, மூளை சுறுசுறுப்பு, நல்ல ரத்த ஓட்டம் ஆகியவற்றிற்கு உதவும் என மருத்துவர்களால் கூறப்படுகிறது. இந்த உடற்பயிற்சி செய்தால் இருதய நோய் கோளாறுகள், நீரிழிவு நோய் ஆகியவையும் வராமல் தடுக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | யூரிக் அமில அளவு குறையும், மூட்டு வலியும் மாயமாகும்: இந்த உணவுகளை மட்டும் தொடவே தொடாதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News