உடல் துற்நாற்றத்தில் இருந்து தப்பிக்க 8 சிறந்த வழிகள்!

வெப்பத்தால் ஏற்படும் உடல் துற்நாற்றத்தினை எவ்வாறு கட்டுப்படுத்துவது!

Last Updated : Apr 1, 2018, 08:08 PM IST
உடல் துற்நாற்றத்தில் இருந்து தப்பிக்க 8 சிறந்த வழிகள்! title=

வெப்பத்தால் ஏற்படும் உடல் துற்நாற்றத்தினை எவ்வாறு கட்டுப்படுத்துவது!

இந்தியாவின் வட மாநிலங்களை மட்டும் அல்லாமல் தெற்கு மாநிலங்களையும் குளிர் கொடுமைப்படுத்தி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைக்கின்றது. கடந்த வார வானிலை அறிக்கையின் படி இதுவரை இல்லாத அளவிற்கு (பிப்., மார்ச் மாதங்களில்) வெயில் முன்னரே வந்த வாட்டி வருகிறது.

இந்த காலகட்டங்களில் வெயிலில் செல்வதை என்பதை காட்டிலும், வெளியில் செல்வது என்பது தான் மிகவும் கடினமாக இருக்கின்றது. அதுவும் அலுகளங்களுக்கு செல்பவர்கள் என்னதான் அலங்கரித்து சென்றாலும், இறுதியில் அலுவலகத்தினை அடையும் போது உடல் துற்நாற்றமும் தொடங்கிவிடுகிறது. வெப்பத்தால் ஏற்படும் இந்த உடல் துற்நாற்றத்தில் இருந்து எவ்வாறு தப்பிப்பது?

உடல் நாற்றத்தினை குறைக்க சில வழிகள்...

  • பைகார்பனேட் சோடா (பேக்கிங் சோடா) உடல் நாற்றத்தினை தடுக்க உதவுகிறது. எனவே இந்த சோடாவினை கூழ்மமாக கரைத்து நாற்றம் ஏற்படகூடிய இடங்களில் தேய்த்து பின்னர் குளித்தால் நல்லது.
  • உருளை கிழங்கின் துண்டுகள் உடல் நாற்றத்தினை குறைக்க உதவும், எனவே அதனையும் குளிப்பதற்கு முன்பு உடலில் தேய்த்து நாற்றத்தினை குறைக்கலாம்.
  • வாசனை திரவியங்களை பயன்படுத்துவதில் கவனமாக இருங்கள். அளவுக்கு அதிகமான அளவு திரவியத்தினை பயன்படுத்துவது ஆபத்தில் முடியலாம். ஏனெனில், இந்து கொள்கலன்களில் அடைகப் பட்டிருப்பவையில் 2-லிருந்து 5% ஆல்கஹால் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • Colognes எனப்படும் சோப்பு நீரினை நீங்கள் குளிக்கும் போது பயன்படுதினால், வென்நீரில் அதனை சேர்க்க வேண்டாம். ஏனெனில் இவற்றிர்க்கு குளிரூட்டும் தன்மை அதிகம்.
  • குளியல் நீரில் சற்று படிகார கற்களின் தூளினையும், அதனுடன் சிறுது புதினா இலை கரைத்து பின்னர் அந்த தண்ணீரில் குளித்தால் உடல் நாற்றத்தினை குறைக்க முடியும்.
  • குளியல் நீரில் சற்று ரோஸ் நீரினை கலந்து குளித்தால் உடல் நாற்றத்தினை குறைக்கலாம்.
  • இரண்டு தேக்கரண்டி ரோஸ் ஆயிலுடன், இரண்டு சொட்டு மர எண்ணெய் சேர்த்து அதனை பஞ்சை கொண்டு அக்கல் பகுதியில் ஒத்தடம் கொடுத்து பின்னர் குளிக்கலாம்.
  • குளித்த பின்னர், ஒரு மக் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டரினை கலந்து முடிகளில் தேய்த்து காயவைத்தால் நாற்றம் மாறி நறுமணமாக மாறிவிடும்.

Trending News