How To Escape From Body Odor : வெயில் காலம் வந்தாலே வியர்வை நாற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். எவ்வளவு சுத்தமாக கொடுத்திருந்தாலும், ஒரு சிலருக்கு தன் உடலில் இருந்து இது போன்ற நாற்றம் வருவது அசெளகரியத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து தப்பிக்க, சில வழிகள்.
உடலை சுத்தமாக வைத்திருத்தல்:
எப்போதும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குளித்து உடலை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். குளிப்பதால் உடலில் உள்ள வியர்வைகள் வெளியேறுவதோடு அதன் மூலம் நமது தோளில் ஒட்டி இருக்கும் பாக்டீரியாக்களும் வெளியேறிவிடும். சாதாரண வியர்வையிலிருந்து நாற்றம் வருவது குறைவுதான். ஆனால் அதனுடன் பாக்டீரியா இணையும்போதுதான் அதிகமாக நாற்றம் அடிக்கும். எனவே உங்கள் உடலை முழுமையாக அனைத்து அங்கங்களிலும் தண்ணீர் சோப் உதவியோடு சுத்தம் செய்யவும். இது, வியர்வை நாற்றத்தில் இருந்து தப்பிக்க உதவும்.
சோப் வகை:
ஆன்ட்டி பாக்டீரியா இல்லாத சோப்பை வாங்கி பயன்படுத்தவும். இது உடலில் உள்ள அழுக்கை நீக்க உதவும். எனவே உங்கள் உடலுக்கு ஏற்ற சோப்பை வாங்கும் போது இதை பார்த்து கவனமாக வாங்கவும்.
டவல் உபயோகப்படுத்துவது:
குளித்து முடித்த பின் உங்கள் உடலை முழுமையாக தண்ணீர் எங்கும் இல்லாத அளவிற்கு டவல் வைத்து துடைக்கவும். குறிப்பாக உங்களுக்கு அதிகம் வியர்வை வழியும் இடத்தில் துடைக்கவும். உதாரணத்திற்கு அக்குளில் அதிக வியர்வை வழிந்தால் அந்த இடத்தில் நன்றாக துடைக்க வேண்டும்.
துணிகளை சுத்தமாக வைத்திருத்தல்:
அதிகமாக உயர்த்த பிறகு அந்த ஆடையை மீண்டும் துவைக்காமல் அணிய வேண்டாம். அதேபோல ஈரப்பதம் நிறைந்த ஆடைகளை அணியும்போதும் வியர்வை நாற்றம் வெளியேறும். எனவே நன்கு தோய்த்து அழுக்கற்று இருக்கும் காய்ந்த ஆடையை உடுத்தவும். ஆடைகள் மட்டுமல்ல காலில் அணியும் கால் உறைகளிலிருந்து, கையில் அணியும் கிளவுஸ் வரை இது பொருந்தும்.
மேலும் படிக்க | முகம் கண்ணாடி போல் பளபளக்க இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றவும்
உணவு உட்கொள்ளல்:
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை வைத்தும் நம் மீது வியர்வை நாற்றம் வரலாம். உங்களுக்கு அதிகம் வியர்வை வர வைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டாம். சூடான உணவுகள், காரமான உணவுகள், மிளகாய் கலந்த உணவுகள் உள்ளிட்டவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும். அதேபோல நீங்கள் சாப்பிடும் உணவில் வெங்காயம் அல்லது பூண்டு ஆகியவை அதிகமாக இருந்தாலும் உங்கள் விரைவ நாற்றத்தின் வழியே அது வெளிப்படும். மது, காபி அதிகம் குடிப்பவர்கள் மீது இருந்து வரும் வியர்வையும் நாற்றம் அடிக்கும். எனவே இது போன்ற உணவுகளை தவிர்க்கவும்.
நல்ல நறுமண திரவியம்..
நல்ல நறுமண திரவித்தின் மூலமாகவும், வியர்வை நாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரலாம். கேஸ் கலந்த திரவியங்களை உபயோகிக்கும் போது, அதை நேரே உடலில் உபயோகிக்காமல், ஆடை உடுத்துவதற்கு முன்னர் அதில் அடித்து உபயோகிக்கலாம். அதே போல, நல்ல பூக்களின் நறுமணம் நிறைந்த திரவியங்களும் வியர்வை நாற்றம் வெளியேறாமல் பார்த்துக்கொள்ளும்.
மேலும் படிக்க | Amla Benefits : உடல் எடை குறைப்பு to சரும பளபளப்பு-நெல்லிக்காயின் பயன்கள்!
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ